தமிழகத்தில் மேலும் 5,709 பேருக்கு கொரோனா உறுதி.. பாதிப்பு எண்ணிக்கை விட டிஸ்சார்ஜ் அதிகம்
சென்னை: தமிழகத்தில் மேலும் 5,709 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,49,654 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தினமும் 5000 முதல் 6000 வரை பரவி வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா நிலவரம் குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் இன்று புதிதாக 5709 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,49,654 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 5,698 பேருக்கும் வெளிநாடு, உள்நாட்டு விமானம் மூலம் தமிழகம் வந்தவர்கள், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என 11 பேருக்கும் சேர்த்து 5,709 பேர் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சோதனை
இன்று 67,025 சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 38,45,803 பேரின் சளி மாதிரிகள் சோதனைக்குள்படுத்தப்பட்டன. இதுவரை 65,705 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அது போல் இதுவரை 37,12,657 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பெண்களுக்கு
இன்று தமிழகத்தில் 3,445 ஆண்களுக்கும், 2,264 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 2.10 லட்சம் ஆண்களுக்கும், 1.38 லட்சம் பெண்களுக்கும் 29 திருநங்கைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 136 பரிசோதனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ்
இன்று மட்டும் 5,850 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2,89,787 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இது ஒரு ஆரோக்கியமான விஷயமாகும். இன்று கொரோனாவால் 121 பேர் பலியாகிவிட்டனர். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 6,007 ஆக உள்ளது.

சென்னையில் நிலவரம்
சென்னையில் இன்று 1182 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 1,19,059 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடலூரில் 250 பேருக்கும், செங்கல்பட்டில் 344 பேருக்கும், குமரியில் 147 பேருக்கும் சேலத்தில் 286 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications