தமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று காரணமாக ஒரே நாளில் 119 பேர் பலியாகி உள்ளனர். எனினும் கொரோனாவில் பாதிக்கப்பட்ட 5,633 பேர் புதன்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையவே இல்லை. 5800 என்கிற அளவிலேயே நீடிக்கிறது. உயிரிழப்பும் தொடர்ந்து 100ஐ தாண்டியே உள்ளது

தமிழகத்தில் தினசரி பரிசோதனைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5871 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 314520 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்குள் மட்டும் 5844 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலம் மற்றும வெளிநாடுகளில் இருந்த வந்த 27 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

119 பேர் இன்று பலி

119 பேர் இன்று பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். இதனால் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5278 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 20 பேர் பலியாகி உள்ளனர். திருவள்ளூரில் 11 பேரும், கோவை, திருநெல்வேலியில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை எவ்வளவு

இதுவரை எவ்வளவு

இதுவரை தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையை பார்த்தோம் என்றால். இன்று ஒரு நாளில் மட்டும் 5633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 256313 பேர் மீண்டுள்ளனர். சென்னையில் இன்று 1160 பேரும், கோவையில் 212 பேரும், காஞ்சிபுரத்தில் 318 பேரும் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். திருநெல்வேலியில் 366 பேரும், தேனியில் 286 பேரும், திருவள்ளூரில் 293 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று ஒரே நாளில் 993 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பபட்டுள்ளது. சென்னையில் தற்போதைய நிலையில் 10955 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று ஒரு நாளில் 20 பேர் சென்னையில் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். செங்கல்பட்டில் இன்று 439 பேருக்கும், திருவளுளூரில் 407 பேருக்கும் கடலூரில் 339 பேருக்கும் தொற்றும், கோவையில் 294 பேருக்கும், விருதுநகரில் 292 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 71 ஆயிரம் பரிசோதனை

71 ஆயிரம் பரிசோதனை

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 71575 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3432025 சாம்பிள்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தனிநபர்கள் என்று பார்த்தால் , இன்று ஒரு நாளில் 69697 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3310036 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 314520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 256313 பேர் குணம் அடைந்துவிட்டனர். தற்போது 52929 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+