தமிழகத்தில் ஒரே நாளில் 5,875 பேருக்கு கொரோனா.. டிஸ்சார்சும் அதிகம்.. நம்பிக்கை தந்த மாற்றங்கள்!
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இன்று ஒரே நாளில் 5,517 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,96,483 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு ஒரே அளவாக 5 ஆயிரத்திற்கு மேல் என்கிற அளவிலயே உள்ளது. குணம் அடைவோர் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட அதே அளவிலேயே உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 56,998 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் 17 பேர்
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 98 பேர் மரணம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4132 ஆக உயர்ந்துள்ளது. அதிபட்சமாக சென்னையில் இன்று 17 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், கோவையில் 7 பேரும், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மற்றும் விருதுநகரில் தலா 6 பேரும், தென்காசியில் 4 பேரும், காஞ்சிபுரத்தில் 5 பேரும், கன்னியாகுமரியில் 4 பேரும் மரணம் அடைந்தனர். ராணிப்பேட்டையில் 3 பேரும், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டத்தில் தலா 2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

எவ்வளவு தொற்று
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 58505 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 5875 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 2779062 பேருக்கு தொற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 257613 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 60344 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 27,79,062 பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

சென்னையில் சிகிச்சை
சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,951 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவில் இருந்து 1303 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புடன் 12190 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் இதுவரை 87604 பேர் குணம் அடைந்துள்ளனர். 2157 பேர் சென்னையில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

தேனியில் கிடுகிடு உயர்வு
செங்கல்பட்டில் 446 பேர், காஞ்சிபுரத்தில் 393 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.விருதுநகரில் 337 பேருக்கும், திருவள்ளூரில் 317 பேருக்கும், தேனியில் 309 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 270 பேர், திருநெல்வேலியில் 201 பேர், கன்னியாகுமரியில் 200 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் 178 பேருக்கும். வேலூரில் 173 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications