கடவுளின் தேசம் கேரளா மட்டுமில்ல.. ஆகஸ்டில் தமிழ்நாட்டில் சுற்றிப்பார்க்க வேண்டிய சூப்பரான 5 இடங்கள்
சென்னை: ஆகஸ்ட் வந்தும் வெப்பம் அனல் பறந்துகொண்டு இருக்கும் சூழலில் இம்மாதத்தில் தமிழ்நாட்டில் சுற்றிப்பார்க்க வேண்டிய முக்கியமான 5 சுற்றுலா தலங்களை பார்ப்போம்.
கடவுளின் தேசம் என்று கூறி ஆகஸ்டு மாதத்தில் கேரளாவிற்கு கொத்து கொத்தாக படையெடுத்து வரும் நமது மக்களுக்கு, ஆகஸ்டு மாதம் தமிழ்நாட்டில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் என்னவென்று அதிகம் தெரியவில்லை. இங்கெல்லாம் சென்றால் கேரளா மட்டுமில்லை, தமிழ்நாடும் கடவுளின் தேசம்தான் என்று மார்த்தட்டி சொல்லலாம்.

1. கொடைக்கானல்: ஆகஸ்டிலும் வெப்பம் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருவதால் குளிர் பிரதேசங்களில் இருந்தே தொடங்குவோம். அந்த வகையில் முதலில் கொடைக்கானலை எடுத்துக்கொள்வோம். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலை பற்றி நாம் பெரிதாக சொல்ல வேண்டிய அவசியமில்லை.
மலைப்பூட்டும் மலைப் பயணம் கடந்து கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வது, மலையை முத்தமிடும் மேகங்களை வருடுவது என கொடைக்கானில் ஏரளமான ரசனைமிகு தருணங்கள் காத்திருக்கும். இவை அல்லாமல் பியர் ஷோலா அருவி, பில்லர் பாறைகள், பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் போன்றவை சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாக உள்ளன.
2. ஊட்டி: இளவரிசியை பற்றி சொல்லிவிட்டு அரசியை விட்டுவிட்டால் அவர் கோபித்துக்கொள்ள மாட்டாரா? நான் சொல்வது ஊட்டியைதான். மலைகளின் அரசி எனப்படும் ஊட்டியும் கொடைக்கானலை போன்ற பிரபலமான தலம். நீலகிரி மலை ரயில், தொட்டபெட்டா சிகரம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, டால்ஃபின் நோஸ், படகு சவாரி என ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்த பகுதி ஊட்டி. கொடைக்கானல் போன்றே உயர்ந்த மலை சிகரங்கள், பழமையான மரங்கள் இங்குள்ளன.
3. குன்னூர்: ஊட்டிக்கு போய்விட்டு குன்னூரை கண்டுகொள்ளாமல் இருக்கலாமா? ஊட்டி அருகிலேயே இருக்கும் இயற்கை தந்த பரிசுதான் குன்னூர். மலைகள் நிரம்பிய சொர்க்க பூமியை போல் காட்சிதரும் குன்னூருக்கு செல்லாமல் ஊட்டிக்கு செல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு திரில்லிங்கான மலைப் பாதைகள், தேகத்தை சிலிர்க்க வைக்கும் தேயிலை தோட்டங்கள் என கண்களை குளிர வைக்க அவ்வளவு விசயங்கள் ஊட்டியில் உள்ளன.
4. வால்பாறை: ஊட்டி, கொடைக்கானலைபோல் வால்பாறை அதிக பிரபலம் கிடையாது. கொஞ்சும் தமிழில் பேசும் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த வால்பாறை பசுமை காடுகளின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. இயற்கை மாறாத அழகியலை தன்னகத்தே கொண்டு உள்ளது. அடர்ந்த காடுகள், ஆனைமலை புலிகள் காப்பகம், நீரார் அணை, சோலையாறு அணை போன்றவை இங்கு சுற்றி பார்ப்பதற்கான இடங்கள்.
5. குற்றாலம்: ஜூன் வந்துவிட்டாலே சுற்றுலா விரும்பிகளின் நினைவுக்கு முதலில் வருவது குற்றாலம். மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் இருந்து ஜில் ஜில் என கொட்டும் நீரில் குளித்து மகிழ தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு படையெடுப்பார்கள் மக்கள். ஆகஸ்ட் மாதத்திலும் அருவிகளில் நன்றாக தண்ணீர் வருவதாக சொல்கிறார்கள். தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தின் அழகை அனுபவிக்க ஆகஸ்டுதான் கடைசி வாய்ப்பு. தவறவிட்டால் அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.
அனைத்தும் மலைப்பகுதிகளாகவே உள்ளதா? இது அல்லாமல் தஞ்சாவூர், கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் என ஆகஸ்டில் சுற்றிப் பார்க்க பல அருமையான இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அடுத்த பகுதியில் இந்த இடங்களை பார்ப்போம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications