காசு சும்மா பிச்சுகிட்டு கொட்டும்! பிஎஃப் கணக்குடன் எல்ஐசி-ஐ லிங்க் பண்ணுங்க..அட்டகாசமான 5 நன்மைகள்!
சென்னை: மாதச் சம்பளம் பெறுபவர்களாக இருக்கும்போது கட்டாயம் அவர்களுக்கு பிஎஃப் பிடித்தம் செய்யப்படும். அந்த கணக்குடன் எல்ஐசி பாலிசியை இணைத்துக் கொள்வதன் மூலம் பல வகையான நன்மைகள் கிடைக்கிறது. இதன் மூலம் ஓய்வு காலத்தை பாதுகாப்பாகவும் நிலையான நிதி வரவோடும் கழிக்க முடியும். மேலும் எல்ஐசி பாலியுடன் உங்கள் பிஎப் அக்கவுண்ட்டை இணைப்பதால் ஐந்து நன்மைகளும் கிடைக்கிறது. அது என்னென்ன? உங்கள் பிஎஃப் கணக்குடன் எல்ஐசி பாலிசி அக்கவுண்ட்டை இணைப்பது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம்..
இன்றைய வேகமான உலகத்தில் பணியாளர்களுக்கு ஓய்வுக்கால நிதி பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்றாகியுள்ளது. இதற்காக அரசு வழங்கும் இரண்டு முக்கியமான திட்டங்கள் தான் பி.எஃப் (Provident Fund) மற்றும் எல்.ஐ.சி (Life Insurance Corporation).

இப்போது இந்த இரண்டு திட்டங்களையும் ஒரே இடத்தில் இணைத்து பயன்படுத்தும் வசதி கிடைத்துள்ளது. இதன் மூலம் பணியாளர்களுக்கு இரட்டை நன்மை கிடைக்கும். ஒன்று, ஓய்வுக்கால சேமிப்பு, இரண்டு வாழ்க்கை காப்பீட்டு ஆகியவை ஒரே நேரத்தில் கிடைக்கும்.
ஏன் இணைக்க வேண்டும்?
பி.எஃப் மற்றும் எல்.ஐ.சி
பலர் சில நேரங்களில் எல்.ஐ.சி பிரீமியத்தை சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் விடுகிறார்கள். இதனால் பாலிசி ரத்து ஆகும் அபாயம் உண்டு. ஆனால் உங்கள் பி.எஃப் கணக்கை எல்.ஐ.சி-யுடன் இணைத்தால், அந்த பிரச்சனை தீர்ந்துவிடும். பி.எஃப் மற்றும் எல்.ஐ.சி தனித்தனியாக இருந்தாலும் நன்மை உண்டு. ஆனால் இணைத்தால் அது ஒரு முழுமையான நிதி பாதுகாப்பு கவசமாக மாறும் என்கின்றனர் நிதி பாதுகாப்பு ஆலோசகர்கள்.
இணைத்தால் கிடைக்கும் நன்மைகள்
பி.எஃப் கணக்குடன் இணைத்தால், EDLI திட்டத்தின் கீழ் பணியாளரின் குடும்பத்தாருக்கு ₹2.5 லட்சம் முதல் ₹7 லட்சம் வரை காப்பீட்டு தொகை கிடைக்கும், பி.எஃப் மூலம் ஓய்வுக்கால நிதி, எல்.ஐ.சி மூலம் வாழ்க்கை காப்பீடு - இரண்டையும் இணைப்பதால் இரட்டிப்பு நன்மை கிடைக்கும், எல்.ஐ.சி பிரீமியம் நேரடியாக பி.எஃப் கணக்கிலிருந்து கழிக்கப்படும் என்பதால், பிரீமியம் செலுத்த மறந்தால் கூட பாலிசி ரத்து ஆகாது. இரண்டு திட்டங்களிலும் ஒரே நாமினியை பதிவு செய்தால், கிளெயிம் செய்யும் போது குடும்பத்தாருக்கு சிக்கல் ஏதும் இருக்காது. EPFO மற்றும் எல்.ஐ.சி இணைப்பால் கிளெயிம் சரிபார்ப்பு வேகமாக நடக்கும். அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையில் நடக்கும்.
இணைப்பது எப்படி?
முதலில் EPFO இணையதளம் சென்று உள்நுழையவும். உங்கள் UAN (Universal Account Number) மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தவும். "KYC Details" பகுதியில் "LIC Policy" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பாலிசி எண் உள்ளிட்ட தேவையான விவரங்களை பதிவு செய்து "Submit" செய்யவும். Employer அல்லது EPFO உறுதிப்படுத்தியதும், உங்கள் PF கணக்கு எல்ஐசியுடன் இணைந்து விடும்
ஓய்வுகாலம்
இது மிகச் சிறிய வேலை தான் என்றாலும் இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பல மடங்கு பெரியது என்பதை கவனிக்க வேண்டும். உங்களது இபிஎப்ஓ விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின் எல்ஐசி பாலிசியை பிஎஃப் கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம். இது உங்களின் ஓய்வுக்கு பிரகான வாழ்க்கையை அமைதியாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றும் என்கின்றனர் நிதி ஆலோசகர்கள்.












Click it and Unblock the Notifications