5 நாளில் சாதி சான்றிதழ்.. எப்படி உடனே பெறுவது? என்னென்ன ஆவணங்கள் தேவை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சாதி சான்றிதழ் உள்ளிட்ட அரசு ஆவணங்களை பெற இனி நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது என அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.. ஆன்லைனில் விண்ணப்பித்தால், அதிகாரிகள் ஆய்வு செய்து 5 நாட்களுக்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த சாதி சான்றிதழை பொதுமக்கள் எப்படி பெறுவது, என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, வருமான சான்றிதழ், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு சேவைகளுக்கு பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து வருகிறார்கள்.

Caste Certificate

5 நாளில் சாதி சான்றிதழ்

இருந்தாலும் விண்ணப்பித்த பிறகு அதிகாரிகளின் ஆய்வு மற்றும் ஒப்புதலுக்கு நீண்ட நாட்கள் ஆவதாலும், சான்றிதழ்களை பெறுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில்தான், இனிமேல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு சாதி சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய சேவைகள் மிக விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மக்கள் விரும்பும் சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு துறையிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைச்சர் செங்கோட்டையன்

குறிப்பாக, வருவாய்த்துறையில் பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை விரைந்து வழங்குவது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சாதி சான்றிதழ் என்பது மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருப்பதால், பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அந்தந்த வருவாய் வட்டத்தில் உள்ள அதிகாரிகள் விண்ணப்பங்களை ஆய்வு செய்து 5 நாட்களுக்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்கும் ஆன்லைனில் விண்ணப்பித்தால் 5 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்று கூறியிருந்தார் .

தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன

இந்த சாதி சான்றிதழை எப்படி பெற வேண்டும் தெரியுமா? பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் e-Sevai Citizen Portal அல்லது அருகிலுள்ள e-Sevai மையம் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது பெயர், முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்களுடன் தேவையான ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும்.

பொதுவாக சாதி சான்றிதழுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, முகவரி சான்று, பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினரின் சாதி சான்றிதழ் நகல், பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்றவை கேட்கப்படலாம். விண்ணப்பத்தின் தன்மைக்கு ஏற்ப கூடுதல் ஆவணங்களும் கோரப்படலாம்.

விஏஓ, வருவாய் ஆய்வாளர் ஆய்வு

ஆன்லைனில் விண்ணப்பித்ததும், அந்த விண்ணப்பம் முதலில் விஏஓ ஆய்வுக்குச் செல்லும்.. அங்கு விஏஓவின் பரிசீலனைக்குப் பிறகு வருவாய் ஆய்வாளர், பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தின் ஒப்புதல் நடைமுறை நடைபெறும்.

இந்த அதிகாரிகளின் ஆய்வு நடைமுறைகளில் எந்தவித காலதாமதமும் ஏற்படாமல், ஆன்லைனில் பெறப்படும் விண்ணப்பங்களை விரைவாக ஆய்வு செய்து 5 நாட்களுக்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ள இந்த நடைமுறை, அரசு ஆவணங்களுக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாகவும் நிம்மதியாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+