இனி சிலிண்டர் ஈஸியா பெறலாம். மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்.. 5 கிலோ சிலிண்டருக்கு ஜாக்பாட்
சென்னை: ''இனி முகவரி தேவையில்லை. செல்லுப்படியாகும் அடையாள அட்டையை வழங்கினால் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்யும் விநியோகஸ்தரர்களிடம் இருந்து 5 கிலோ எடை கொண்ட எஃப்டிஎல் சிலிண்டர்களை பெற்று கொள்ளலாம்'' என்று மத்தியஅரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது போர் புரிந்து வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது.

இதனால் நம் நாடு மட்டுமின்றி சீனா உள்பட பல நாடுகளுக்கான கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய், கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது நம் நாட்டுக்கு வரும் கப்பல்களை ஈரான் அனுமதித்து வருகிறது. இது ஓரளவுக்கு பிரச்சனை வராமல் இருக்க உதவுகிறது.
பிஐபி செய்திக்குறிப்பு
இருப்பினும் கூட கேஸ் தட்டுப்பாட்டை தவிர்க்க மத்திய அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நகர்புற பகுதிகளில் எல்பிஜி முன்பதிவு இடைவெளியை 21ல் இருந்து 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் PIB (Press Information Bureau) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
எல்பிஜி சிலிண்டர்
''ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எல்பிஜி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் எந்தவித பதற்றமும் இன்றி, பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜி-ஐ தேவையின்றி வாங்கவோ, முன்பதிவு செய்யவோ வேண்டாம்.
வதந்திகளை நம்ப வேண்டாம். சரியான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும். எல்பிஜி முன்பதிவுக்கு டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எல்பிஜி விநியோகஸ்தர்களை நேரில் சந்திக்க வேண்டாம்
முடிந்தவரை பிஎன்ஜி, இன்டக்ஷன் மற்றும் மின்சார அடுப்புகள் போன்ற மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
5 கிலோ எடை எஃப்டிஎல் எல்பிஜி
எல்பிஜி தேவையை கருத்தில் கொண்டு மண்ணெண்ணெய், நிலக்கரி போன்ற மாற்று எரிபொருட்களின் விநியோகங்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து 5 கிலோ எடை கொண்ட எஃப்டிஎல் (FTL) எல்பிஜி சிலிண்டர்களை இலக்கு வைத்து விநியோகிப்பதை மாநிலங்கள் பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது புவிசார் அரசியல் சூழல் காரணமாக எல்பிஜி சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட நம் நாட்டில் எந்த எல்பிஜி விநியோகஸ்தரிடமும் பற்றாக்குறை வரவில்லை. நேற்று, ஆன்லைன் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவுகள் 95% ஆக உயர்ந்துள்ளன.
டிஏசி அடிப்படையிலான விநியோகங்கள் பிப்ரவரி 2026ன் 53 சதவீதம் இருந்த நிலையில் நேற்று 89% ஆக அதிகரித்துள்ளது. நேற்று சுமார் 51 லட்சம் உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
முகவரி சான்று தேவையில்லை
இப்போது 70% வணிக ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதில் 10% சீர்திருத்த அடிப்படையிலானது. நேற்று 71,000-க்கும் மேற்பட்ட 5 கிலோ எப்ட்எல் (FTL) சிலிண்டர்கள் விற்கப்பட்டுள்ளன. மார்ச் 23 முதல் சுமார் 5.7 லட்சம் என்ற அளவுக்கு 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் விற்கப்பட்டுள்ளன.5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் அருகில் உள்ள எல்பிஜி விநியோக நிலையங்களில் கிடைக்கின்றன. செல்லுபடியாகும் அடையாள அட்டையை காண்பித்து இதனை வாங்கி கொள்ளலாம். இதற்கு முகவரி சான்று தேவையில்லை. மார்ச் 14ல் இருந்து மொத்தம் 72,047 மெட்ரிக் டன் வணிக எல்பிஜி விற்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் திடீர் ஆய்வுகள்
உள்நாட்டு பிஎன்ஜி (D-PNG) மற்றும் சிஎன்ஜி போக்குவரத்து (CNG-Transport) பயன்பாட்டாளர்களுக்கு 100% விநியோகம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எல்பிஜி பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைப்படுத்துதலைக் கட்டுப்படுத்த, பல மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
நேற்று மட்டும் 3700-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பதை தடுக்கும் விதமாக, ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் (OMC) அதிகாரிகள் திடீர் ஆய்வுகளை அதிகப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பிஎன்ஜி இணைப்புகளுக்கு முன்னுரிமை
மேலும் இதுவரை, அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் (PSU OMCs) எல்பிஜி விநியோகஸ்தர்களுக்கு 1000 நோட்டீஸ் அனுப்பியுள்ளன. இதுவரை 27 எல்பிஜி விநியோகஸ்தர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வணிக எல்பிஜி கிடைப்பது குறித்த கவலைகளைத் தீர்க்க, உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் கேன்டீன்கள் போன்ற வணிக நிறுவனங்களுக்கு பிஎன்ஜி இணைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அரசு சிஜிடி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஐஜிஎல், எம்ஜிஎல், கெயில் கேஸ் மற்றும் பிபிசிஎல் போன்ற சிஜிடி நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் வணிக பிஎன்ஜி இணைப்புகளைப் பெறுவதற்கு சலுகைகளை வழங்கியுள்ளன'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications