5 தவறுகள்.. லோக்சபா தேர்தல் திட்டத்தில் சொதப்பும் பாஜக.. தாமரைக்கு என்ன ஆச்சு? முதல்முறை இப்படி
சென்னை: 2024 லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் 5 முக்கியமான தவறுகளை பாஜக செய்துள்ளது. பாஜக கட்சியின் மோசமான திட்டமிடலாக இது பார்க்கப்படுகிறது.
இந்திய அரசியலில் தேர்தல் யுக்திகளை மாற்றியதில் பாஜகவிற்கு பெரிய பங்கு உண்டு. இதற்கு பாஜகவை பாராட்ட வேண்டும் என்று கூட கூறலாம். தேர்தல் பிரச்சாரங்களில் பாஜக இத்தனை காலம் கிங்காக இருந்தது. ஆனால் இப்போது அதே பார்முலாவை மற்ற கட்சிகள் பின்பற்றி.. பாஜகவை முந்த தொடங்கிவிட்டன.

தேர்தல் திட்டமிடலில் இந்திய அரசியலில் முன்னோடியாக இருந்த பாஜக இப்போது இதே விஷயத்தில் சொதப்பி வருகிறது. முக்கியமாக "பிராண்ட் மோடி" இப்போது பாஜகவிற்கே எதிராக திரும்ப தொடங்கி உள்ளது.
5 தவறுகள்: 2024 லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் 5 முக்கியமான தவறுகளை பாஜக செய்துள்ளது. அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
1. தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையம்தான் வெளியிட்டது என்றாலும் அதை பெரும்பாலும் திட்டமிடுவது மத்திய ஆளும் கட்சிதான் என்று கூறுவார்கள். அந்த வகையில் பாஜக இந்த தேர்தலை சரியாக திட்டமிடவில்லை. தேர்தலின் முதல் 3 கட்டங்களை தெற்கில் நடத்த திட்டமிட்டதில் பாஜக சொதப்பிவிட்டது என்கிறார்கள்.
2. பாஜக அமைப்பு இந்த முறை வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஆர்எஸ்எஸ் உடன் ஆலோசனையே செய்யவில்லை. இதனால் பல தொகுதிகளில் ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே மோதல் உள்ளது. இதனால் ஆர்எஸ்எஸ் அமைப்பு பல தொகுதிகளில் மோடிக்காக வேலை பார்க்காமல் உள்ளது.
3. பாஜகவின் வேட்பாளர் தேர்வு ராஜ்புத் சமூகம் உள்ளிட்ட சத்திரிய சமூகத்தை கடுமையாக கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ராஜ்புத் சமூகத்தின் மகாபஞ்சாயத், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள முதல்கட்ட பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. வேலையின்மை, அக்னிவீர் திட்டம் மற்றும் ராஜ்புத் சமாஜ் அவமதிப்பு போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர்.
நாங்கள் யோகியை எதிர்க்கவில்லை. ஆனால் டெல்லியில் இருக்கும் பாஜகவின் பெரிய தலைகளை எதிர்க்கிறோம்.
சிவால் காஸ் (பாக்பத்), சர்தானா (மீரட்) மற்றும் கட்டௌலி (முசாபர்நகர்) ஆகிய தொகுதிகளின் கீழ் வரும் 24 கிராமங்களின் கூட்டமைப்பான “சௌபிசி” ஏற்பாடு செய்திருந்த மகாபஞ்சாயத்தின் போது, ராஜ்புத் அதிகாரத்தை அடையாளப்படுத்தும் -சமாஜ்வாதி வேட்பாளருக்கு மட்டுமே தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும்.
அவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த வி.பி.சிங் மற்றும் சந்திரசேகர் ஆகிய இரு முன்னாள் பிரதமர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு ஏன் இன்னும் பாரத ரத்னா வழங்கப்படவில்லை என்று நேற்று பஞ்சாயத்தில் பேசப்பட்டது.
4. பிரதமர் மோடி நேரடியாக இஸ்லாமியர்களை தாக்கி பேசுவது உபி பீகாரில் வேலை செய்யலாம். ஆனால் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி , ஒடிசா போன்ற மாநிலங்களில் பயன் அளிக்காது. இது பாஜகவின் சொதப்பமான திட்டமிடலாக மாறி உள்ளது.
5. 4 கட்ட தேர்தல் முடிந்தும் கூட இதுவரை பாஜக இதை வைத்துதான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று உறுதியான முடிவை எடுக்கவில்லை. ஒரு நாள் இஸ்லாமியர்களை பற்றி பேசும் மோடி மறுநாளே நான் இஸ்லாமியர்களை பற்றி பேச மாட்டேன் என்கிறார். அதேபோல் ஒருநாள் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை பற்றி பேசும் மோடி மறுநாளே அந்த விஷயங்களை பற்றி பேசாமல் அமைதியாகிவிடுகிறார். பிரச்சாரம் செய்ய சரியான தீம் கிடைக்காமல் அம்பானி, அதானியை எதிர்க்கும் நிலை கூட மோடிக்கு ஏற்பட்டு உள்ளது.
-
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications