அங்கே பாருங்களேன்..நிலவுக்கு அருகே ஒரே நேர்கோட்டில் அணிவகுத்த 5 கிரகங்கள்..ஆச்சரியப்பட்ட மக்கள்!
சென்னை: வானத்தில் சில நேரங்களில் அதிசயங்கள் நிகழும். அப்படி ஒரு அதிசயம் நேற்றைய தினம் நிகழ்ந்தது. சூரிய அஸ்தமனத்திற்குப்பிறகு தொடுவானத்தின் மேற்கு பக்கத்தில் 5 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரிசையாக இருந்ததை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
ராசி மண்டலத்தில் கும்ப ராசியில் சனி, மீன ராசியில் சூரியன், புதன், குரு, மேஷ ராசியில் ராகு, சுக்கிரன், மிதுனராசியில் சந்திரன், செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. துலாம் ராசியில் கேது பயணம் செய்கிறார்.
ஒன்பது கிரகங்களில் குரு, சுக்கிரன். செவ்வாய், புதன், சந்திரன் கிரகங்கள் வானத்தில் வரிசையாக ஒரே நேர்கோட்டில் இருந்தன. வானத்தில் பல நட்சத்திரங்களில் மின்னிய நிலையிலும் மேற்கு வானத்தில் இந்த 5 கிரகங்களின் அணிவகுப்பினை தெளிவாக காண முடிந்தது.

5 கிரகங்கள் அணிவகுப்பு
சூரியன் மறைந்த பின்னர் மேற்கு பகுதியில் கிரகங்கள் வரிசையாக காட்சி அளித்தன. வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால் அவற்றை தெளிவாக பார்த்து ரசித்தனர். சந்திரனும் மேற்கு வானத்தில் பிரகாசமாக ஒளிர்ந்த போது இந்த கிரகங்களின் கூட்டணியை வானத்திலும் தெளிவாக வரிசையாக வெறும் கண்களால் கண முடிந்தது.

செவ்வாய் அருகில் நிலவு
அதிலும் செவ்வாய் கிரகம் செந்நிறத்தில் நிலவுக்கு அருகில் சிவப்பு நிறத்தில் சுடராக ஒளிந்தது. யுரேனஸ், புதன் கிரகங்களையும் சுக்கிரனுக்கு மேலே பச்சையாக ஒளிர்ந்தது. கடந்த ஆண்டு கோடைகாலத்தில் 6 கிரகங்கள் அதிகாலையில் கிழக்குப் பகுதியில் வரிசையாக தோன்றின. நேற்றைய தினம் மேற்கில் 5 கிரகங்கள் வரிசையாக தோன்றின. இனி 17 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த அதிசய காட்சியை காண முடியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஒரே ராசியில் கிரகங்கள்
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அப்போது ஆறு கிரகங்கள் தனுசு ராசியில் சஞ்சரித்தன. சூரியன், சனி, கேது, குரு, புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் தனுசு ராசியில் இணைந்திருக்க கூடவே சூரிய கிரகணமும் நிகழ்ந்தது. அது மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் அப்போது கணித்தனர்.ஜோதிடர்கள் சொன்னது போலவே கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகத்தை தாக்கியது. மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டனர். பல லட்சம் பேர் உயிரிழந்தனர்.

ஒரே வரிசையில் கிரகங்கள்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் சுக்கிரன், குரு, சனி, செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வரிசையாக அணிவகுத்தன. பூமியில் இருந்து இதை வெறும் கண்களால் காண முடிந்தது. இந்த ஆண்டு இதுபோல கிரகங்களின் அணிவகுப்பு நிகழப்போகிறது. பொதுவாக இதுபோன்ற கிரகங்களின் சேர்க்கை அணிவகுப்பின் போது ஏதாவது ஒரு அதிசயம் நிகழும். சில நேரங்களில் நிலநடுக்கம், பூகம்பம், சுனாமி போன்ற மிகப்பெரிய விபத்துக்கள் கூட நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு ஒரே வரிசையில் 5 கிரகங்கள் இணைந்து செவ்வாய் கிழமையான நேற்றைய தினம் வானில் தோன்றியதால் ஏதேனும் விபரீதம் நிகழுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications