Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க பாசிட்டிவான நபரா, நெகட்டிவ் எண்ணம் உள்ளவரா? ஜஸ்ட் 5 கேள்விக்கு பதில் சொல்லுங்க.. ஈஸி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் பாசிட்டிவான நபரா, விஷயங்களை நெகட்டிவாக அணுகுபவரா என்பதை அறிய இந்த 5 கேள்விக்கு பதில் சொல்லுங்க.. உடனே கண்டுபிடிச்சிடலாம். வாங்க பார்க்கலாம்.

இங்கு நிறைய பேர் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை எப்படி அணுகுகிறார்கள் என்பதை பொறுத்தே அவர்கள் பாசிட்டிவ் எண்ணம் உடையவர்களா அல்லது நெகட்டிவ் மனநிலை உடையவர்களா என்பது தெரியும். சிலர் தாங்கள் போகும் போது மழை வந்தால், கடுப்பாகி மழையை திட்டிக்கொண்டே இருப்பார்கள். அதேநேரம் சிலர் மழை வந்தால் அதை ரசித்தபடி செல்வார்கள்.

5 psychological questions and answers for tested one is optimist or pessimist

நீங்கள் ஒரு விஷயத்தை செய்ய முடியாமல் நீண்ட நாட்களாக அல்லது நீண்ட நேரமாக தடுமாறுவீர்கள்.. அப்போது உங்களிடம் வந்து இப்படி செய்தால் ஈஸியாக பண்ணலாம் என்று ஒருவர் அட்வைஸ் சொல்வார். அவர் அப்போது வாழ்க்கையில் முன்னேற இதல்லாம் விட்டுருங்க ப்ரோ, என்று அட்வைசும் செய்வார்.. அப்படியான சமயத்தில் அவரது அட்வஸை மனப்பூர்வமாக ஏற்று குறைகளை சிலர் சரிசெய்ய முயற்சிப்பார்கள்.

சிலர், மனதுக்குள், பெரிய இவரு.. நமக்கு அட்வைஸ் சொல்ல வந்துட்டான்.. இவனெல்லாம் அட்வைஸ் செய்யும் நிலை வந்துவிட்டதே என்று சிலர் இருப்பார்கள்.இப்படி நமக்கு நடக்கும் விஷங்களை நேர்மையாகவும் எதிர்மறையாகவும் நம் முன்னே அணுகுபவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எந்த வகையை சேர்ந்தவர்கள் என்பதை அறிய இந்த ஐந்து கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்த்துவிடுவோம்.

கேள்வி 1: காட்சி: நீங்கள் பல நாட்களாக செய்ய நினைத்த வேலை குறித்து ஒருத்தர் உங்களிடம் இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார். அவர் மிகவும் பாசிட்டிவ் ஆக உங்களிடம் பேசுகிறார். முன்னேறுவதற்கு நல்ல ஐடியாவும் தருகிறார்.
இப்ப விஷயத்துக்கு வருகிறேன்.. உங்களிடம் ஒரு கேள்வி: நீங்கள் இதை எப்படி அணுகுவீங்க?

பதில்: நம்பிக்கை உள்ள பாசிட்டிவ் ஆனவங்க இப்படி பேசுவாங்க.. "உங்களுடைய பாசிட்டிவ் ஆன பேச்சை கேட்டதில் ரொம்ப சந்தோஷமுங்க.. நான் முன்னேற வேண்டும் என்று நினைத்து நீங்கள் கொடுத்த ஐடியாக்கள் நான் யோசிக்காத சூப்பர் அறிவுப்பூர்வமானவை. என்னோட பிளானுக்கு உங்களுடைய அட்வைஸ் நிச்சயம் மிகப்பெரிய அளவில் உதவும் என்று நம்புகிறேன்" என்று சொல்வார்
அவநம்பிக்கை உள்ள நெகட்டிவ் ஆனவர்கள் இப்படி பேசுவாங்க.. " நீங்க பாசிட்டிவ் ஆன விஷயங்களை தான் சொல்றீங்க. ஆனால் என்னுடைய திட்டத்தை முடிக்க நீங்க சொல்ற விஷயம் சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.. அட்வைஸ் அந்த அளவிற்கு ஒர்த் இல்லை" என்று கூறுவார்

கேள்வி 2: காட்சி: நீங்களும் உங்க பிரெண்டும், மூணாறு, கொடைக்கானல், ஊட்டி மாதிரியான அற்புதமான மலை பிரதேசத்திற்கோ அல்லது உங்கள் இருவருக்கும் பிடித்த இடத்திற்கோ சுற்றலா செல்ல பிளான் போடுறீங்க.. ஆனால் வானிலை மையம் என்ன சொல்றாங்க அப்படீன்னா, குறிப்பிட்ட நாளில் மழை போட்டு வெளுவெளு என்று வெளுக்கும் என்று சொல்கிறார்கள்.

இந்த மாதிரி வானிலை மையம் சொன்ன பிறகு நீங்க எப்படி அதை அணுகுவீங்க..

பதில் : நம்பிக்கை உடைய பாசிட்டிவ் ஆன நபர் இப்படி பேசுவார்.. "நாங்க மலை பிரதேசத்திற்கு குடைகளைக் கொண்டு போவோம். மழையில் நனையாமல் இருக்க தேவையான விஷயங்களை எடுத்துக்கொண்டு போவாம். அதனால் என்ன மழை பெய்தாலும் பார்க்க ரம்மியமாகவும், அழகாகவும் இருக்கும். அதை ரசிப்போம்" என்று கூறுவார்.

நம்பிக்கை இல்லாத நெகட்டிவ் ஆன நபர் இப்படி பேசுவார்.. " சீ என்னடா கிளைமேட்டு.. இப்படி சொதப்பிடுச்சு.. நம்ம டூர் போற திட்டத்தையே இந்த கிளைமேட் அழிச்சிடுச்சு.. இப்படித்தான் நான் எப்ப டூர் போனாலும் மழை வந்து வீணாக்கிடும்னு தெரியும். டூம் போறதையே ரத்து பண்ணிடுவோம்" என்று பேசுவார்.

கேள்வி 3: காட்சி: நீங்கள் உங்களுக்கு பிடித்த, மிக ஜாலியாக செய்யக்கூடிய வேலைக்கு அப்ளை பண்றீங்க.. இன்டர்வியூ எல்லாம் முடிஞ்ச பின்னாடி, அவங்க வேறொருவரை வேலைக்கு எடுத்துவிட்டதாக உங்களுக்கு மெயில் வருகிறது.

அப்படியான சூழலை நீங்கள் எப்படி உணருவீங்க..?

பதில்: நம்பிக்கை உடைய பாசிட்டிவ் ஆன நபர் இப்படி பேசுவார்.. "எனக்கு இந்த வேலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.. இப்போது நான் சென்ற இன்டர்வியூ, எதிர்காலத்தில் நான் செல்ல போகும் இன்டர்வியூவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பல விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது.எனவே இதனை ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கிறேன்" என்று கூறுவார். க

நம்பிக்கை இல்லாத நெகட்டிவ் ஆன நபர் இப்படி பேசுவார்.. "எனக்கு வேலை கிடைக்காது என்று முன்னாடியே நல்லா தெரியும்.. இவங்க எல்லாம் இப்படி தான்.. இன்டர்வியூ என்று வரசொல்லி எல்லா கேள்வியும் கேட்டுட்டு, வேலை இல்லைன்னு சொல்லிடுவாங்க.. எப்பவும் இப்படித்தான் பண்ணுவாங்க" என்று பேசுவார்.

கேள்வி 4: காட்சி: நீங்கள் ட்ராஃபிக்கில் சிக்கிக்கிட்டீங்க.. உதாரணமாக சொல்வது என்றால், உங்கள் ஆபிஸில் முக்கியமான மீட்டிங்க் நடக்க போகுது. காலையில் கடும் டிராபிக் .. கொஞ்சம் தாமதமாகவே போறீங்க..

இந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் எப்படி பேசுவீங்க..

பதில்: நம்பிக்கை உடைய பாசிட்டிவ் ஆன நபர் இப்படி பேசுவார்.. "சாலை செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இயல்பு தான்.. ஆனால் நான் இந்த நேரத்தை மீட்டிங்கிற்கு மனரீதியாக தயார் செய்ய பயன்படுத்த நினைப்பேன்" என்பார்-

நம்பிக்கை இல்லாத நெகட்டிவ் ஆன நபர் இப்படி பேசுவார்.. " நானே கொஞ்ச நேரம் கூடம் இல்லாமல் வேகமாக போகும் போது இப்படியா போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது... இப்போது நெரிசலில் சிக்கிக்கொண்டேன். இந்த நாளே வீணாக போகுது" என்று வேதனையுடன் பேசுவார்.

கேள்வி 5: காட்சி: நீங்கள் இதுவரை செய்திடாத ஒரு சவாலான வேலையை உங்களுக்கு கம்பெனியில் தர்றாங்க..

இந்தவேலையை எப்படி அணுகுவீங்க..

பதில்: நம்பிக்கை உடைய பாசிட்டிவ் ஆன நபர் இப்படி பேசுவார்.. "புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கும், தெரியாத புதிய தொழில் நுணுக்கங்களை வளர்ப்பதற்கும் இந்த வேலை எனக்கு மிகச்சிறந்த வாய்ப்பு" என்று கூறுவார்.

நம்பிக்கை இல்லாத நெகட்டிவ் ஆன நபர் இப்படி பேசுவார்.. "இதை என்னால் செய்ய முடியுமான்னே எனக்குத் தெரியவில்லை. இது மிகவும் கடினமாக இருக்கும். என்னை பழிவாங்க இந்த வேலையை கொடுத்துட்டாங்க" என்று பேசுவார்.

மேலே சொன்ன ஐந்து கேள்விகளையும் பதில்களையும் பார்த்திருப்பீர்கள்.. இதில் பாசிட்டிவ், நெகட்டிவ் விஷயங்கள் நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இதில் நீங்கள் யார் என்பது இதில் உள்ள பதில்களை பொறுத்து முடிவு செய்து கொள்ளுங்கள். நேர்மறை எண்ணம் உள்ளவர்கள் பொறுமையாக நல்ல மனநிலையுடன் எதையும் கையாளுவார்கள்..

எதிர்மறை எண்ணம் உள்ளவர்கள் எதையும் பதற்றத்துடன் அணுகுவார்கள். தன்னை சுற்றி எல்லாம் தவறாக நடப்பதாகவும், மற்றவர்கள் தன்னை பற்றி தவறாக நினைப்பார்கள் என்றும் எண்ணி, பதறி பதறி காரியங்களை செய்வார்கள். பதறிய காரியம் சிதறும் என்பது நெகட்டிவ் எண்ணம் உடையவர்களுக்கு நன்றாக பொறுந்தும். இதில் யார் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+