ஸ்விங் தொகுதிகள்.. இந்த 5 இடங்களில்தான் போட்டி கடுமையாக இருக்கும்.. திமுக vs அதிமுக.. நோட் பண்ணுங்க
சென்னை: அதிமுக - திமுக நேரடியாக மோதும் 13 தொகுதிகளில் 5 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில்,

1 ) வடசென்னை - கலாநிதி வீராசாமி
2 ) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
3 ) மத்திய சென்னை - தயாநிதி மாறன்
4 ) காஞ்சிபுரம் (தனி) - செல்வம்
5 ) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
6) வேலூர் - கதிர் ஆனந்த்
7 ) தருமபுரி - அ.மணி
8 ) திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை
9 ) சேலம் - செல்வ கணபதி
10 ) கள்ளக்குறிச்சி - மலையரசன்
11 ) நீலகிரி (தனி) - ஆ.ராசா
12 ) பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி
13 ) கோவை - கணபதி ராஜ்குமார்
14 ) தஞ்சாவூர் - ச.முரசொலி
15 ) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி
16 ) தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார்
17 ) ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
18 ) பெரம்பலூர் - அருண் நேரு
19 ) தேனி - தங்க தமிழ்செல்வன்
20 ) ஈரோடு - பிரகாஷ்
21 ) ஆரணி - தரணி வேந்தன்
அதிமுக வேட்பாளர்கள்: தமிழ்நாட்டில் 33 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
1.வடசென்னை - ராயபுரம் மனோ
2.தென்சென்னை - ஜெயவர்த்தன்
3.காஞ்சிபுரம் - ராஜசேகர்
4.அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
5.கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்
6.ஆரணி - கஜேந்திரன்
7.விழுப்புரம் - பாக்யராஜ்
8.சேலம் - விக்னேஷ்
9.நாமக்கல் - தமிழ்மணி
10.ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
11.கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல்
12.சிதம்பரம் - சந்திரஹாசன்
13.நாகை - சுர்ஜித் சங்கர்
14.மதுரை - சரவணன்
15.தேனி - நாராயணசாமி
16.ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
17.கோவை - சிங்கை ராமச்சந்திரன்
18.பொள்ளாச்சி- கார்த்திக் அப்புசாமி
19.திருச்சி - கருப்பையா
20.பெரம்பலூர் - சந்திரமோகன்
21.மயிலாடுதுறை - பாபு
22.ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்
23.தருமபுரி - அசோகன்
24.திருப்பூர் - அருணாசலம்
25.நீலகிரி - லோகேஷ்
26.வேலூர் - பசுபதி
27.திருவண்ணாமலை - கலியபெருமாள்
28.கள்ளக்குறிச்சி - குமரகுரு
29.சிவகங்கை - சேவியர் தாஸ்
30.நெல்லை - சிம்லா முத்துச்சோழன்
31.புதுச்சேரி - தமிழ்வேந்தன்
32.தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
33.கன்னியாகுமரி - பசிலியா நசரேத்
5 தொகுதிகளில் கடுமையான போட்டி
ஈரோடு: கடந்த முறை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இங்கே திமுகவின் கணேசமூர்த்தி வென்றார். இந்த முறை திமுக வேட்பாளரை மாற்றி உள்ளது. அதே சமயம் அதிமுகவும் வேட்பாளரை மாற்றி உள்ளது.
பிரகாஷ் - திமுக
அசோக்குமார் - அதிமுக
கடந்த முறை வாக்கு வித்தியாசம் அதிகம் இருந்தாலும் கொங்கு மண்டலம் என்பதாலும், வேட்பாளர்கள் மாற்றப்பட்டதாலும் இங்கே கடும் போட்டி நிலவும் வாய்ப்புகள் உள்ளன.
கோவை: கடந்த முறை சிபிஎம் வென்ற தொகுதியில் இந்த முறை நேரடியாக திமுக களமிறங்குகிறது. அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார். அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக பணியாற்றிய இவர், மார்ச் 2016ல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக உள்ளார்.
கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். முக்கியமாக டாக்டர் மகேந்திரன் உட்பட பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்தது. கடைசியில் கணபதி ராஜ்குமார் தேர்வாகி உள்ளார். செந்தில் பாலாஜி இல்லாத நிலையில் இங்கே கடும் போட்டி நிலவும் வாய்ப்புகள் உள்ளன.
கணபதி ராஜ்குமார் - திமுக
சிங்கை ராமச்சந்திரன் - அதிமுக
தென் சென்னை: ஜெயவர்தன் என்று அழைக்கப்படும் ஜெயக்குமார் ஜெயவர்தன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஆவார். 2014 லோக்சபா தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக சென்னை தெற்கு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜே ஜெயவர்தன் 26 வயதில் தமிழ்நாட்டின் தென் சென்னை தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் இளைய எம்.பி என்று அப்போது பிரபலம் அடைந்தார்.
இப்போது மீண்டும் இதே தொகுதியில் அவர் 3வது முறையாக போட்டியிடுகிறார். கடந்த லோக்சபா தேர்தலில் இதே தொகுதியில் அவர் 3,02,649 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் தமிழச்சி தங்க பாண்டியன் 564,872 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதே தொகுதியில் மீண்டும் தமிழச்சி தங்க பாண்டியன் போட்டியிட வாய்ப்பு உள்ள நிலையில்தான் ஜெயவர்த்தன் களமிறக்கப்பட்டு உள்ளார். இதனால் இங்கே கடும் போட்டி நிலவும் வாய்ப்புகள் உள்ளன.
தமிழச்சி தங்க பாண்டியன் - திமுக
ஜெயர்வர்தன் - அதிமுக
சேலம்: எஸ் ஆர் பார்த்திபன் திமுக சார்பாக இங்கே 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் செல்வ கணபதி இங்கே களமிறக்கப்பட்டு உள்ளார். இவருக்கு தீவிர வன்னியர் வாக்குகள் ஆதரவு உள்ளது. ஆனாலும் சேலம் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதி என்பதால் இங்கே கண்டிப்பாக அதிமுக அடித்து ஆடும். இதனால் இங்கே கடும் போட்டி நிலவுகிறது.
செல்வ கணபதி - திமுக
விக்னேஷ் - அதிமுக
ஆரணி: கடந்த தேர்தலில் இங்கே காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் போட்டியிட்டு 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால் இந்த முறை திமுக இங்கே களமிறங்குவதால் போட்டி கடினமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தரணி வேந்தன் - திமுக
கஜேந்திரன் - அதிமுக












Click it and Unblock the Notifications