5 ஸ்டார் ஓட்டலில் காதலி.. அப்பா வீட்டில் மகன் செய்த காரியம்.. பூட்டு தயாரிப்பாளர் தந்த ஷாக் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது.. குடும்பத்தினர் ஊரில் இல்லாத நேரத்தை பார்த்து, கன கச்சிதமாக திட்டமிட்டு இப்படியொரு காரியத்தை நடத்தியிருக்கிறார் 25 வயது இளைஞர்.. காதலியின் மோகமும், நண்பர்களின் சதியும் அம்பலமாகி உள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அசாம் மாநிலம் ஜோர்ஹாட் நகரில் மிகப்பெரிய தொழிலதிபர் அவர்.. இவருக்கு ஒரே மகன் யேஷ் தனுகா அகர்வால்.. 25 வயதாகிறது.. தன்னுடைய மகன், குடும்பத்தையும், தன்னுடைய நற்பெயரையும் காப்பாற்றுவார் என்று அப்பா மனக்கோட்டை கட்டியிருந்தார்.

Girlfriend

ஆனால், அப்பாவின் பிசினஸின் அனைத்து ரகசியங்களையும், சொத்து விவரங்களையும், வீட்டின் ரகசியங்களையும் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருந்தார் யேஷ் தனுகா அகர்வால்...

உடைக்கப்பட்ட படுக்கையறை லாக்கர்

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி, குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியூர் சென்றிருந்தனர்.. பிறகு சில நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தபோது, படுக்கையறை லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது.. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் திருடு போயிருந்தது.. அதை பற்றி விசாரிக்க வீட்டில் மகன் அகர்வாலும் இல்லை.

இதனால் பதறிப்போன தொழிலதிபர், வீட்டில் கொள்ளை போனது குறித்து போலீசுக்கு போனார்.. இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ஜோர்காட் சதர் போலீசார், சைபர் கிரைம் பிரிவு உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர். அதில் குடும்ப உறுப்பினரே இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

மாயமான மகன்

அப்போதுதான் தன்னுடைய மகன் அகர்வால் மாயமாகியிருப்பதை போலீசாரிடம் சொன்னார் தொழிலதிபர்.. உடனே அவரது செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த தந்தை, நேரடியாக தானே அகமதாபாத் விரைந்தார்.. அங்கிருந்த மகனை மீட்டு ஜோர்காட் கொண்டுவந்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

Girlfriend

அகர்வாலிடம் விசாரணை மேற்கொண்டபோதுதான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின., அதாவது குடும்பத்தினர் வெளியூர் சென்ற நேரம் பார்த்து, பெட்ரூமில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முயன்றுள்ளார் அகர்வால்.. ஆனால் அந்த பூட்டை உடைக்க முடியவில்லை. இதனால் தன்னுடைய நண்பர்கள் ஜீது சோமணி, ரோஹித் பிரசாத் என்பவர்களின் உதவியை நாடினார்..

லாக்கர் பூட்டு

அவர்களாலும் பூட்டை உடைக்க முடியவில்லை.. எனவே, தொழில்முறை பூட்டு தயாரிப்பாளரின் உதவியை அனைவரும் நாடினார்கள்.. இறுதியில் பூட்டு உடைக்கப்பட்டது.. லாக்கரிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, ஜோர்ஹாட்டில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் நோக்கி ஓட்டம் பிடித்தார் அகர்வால். அங்குள்ள காஸ்ட்லி 5 ஸ்டார் ஓட்டல்களில், தனது நீண்டகால காதலி பூபாலி தத்தாவுடன் உல்லாசமாக பொழுதை கழித்துள்ளார்..

காதலிக்கு ரூ.1.5 லட்சத்தில் பிரத்யேக ஐபோன் கிஃப்ட் தந்துள்ளார்.. விருந்துகளும் உல்லாச பயணங்களுமாகத் திருடிய பணத்தை தண்ணீராய் இறைத்தார் அகர்வால்.. பெற்றோர்கள் இல்லாத நேரத்தைப் பார்த்து காதலியும் காதலன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

திருடப்பட்ட தங்க நகைகளில் சில கோலகாட் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்கப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எப்ஐஆரில் இடம்பெற்றுள்ள ஜிது சோமணி மற்றும் ரோஹித் பிரசாத் ஆகிய 2 பேர் மீதும் போலீசாருக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தலைமறைவாக உள்ள இவர்களை குறிவைத்து காவல்துறையினர் வலைவிரித்துள்ளனர்.

5 ஸ்டார் ஓட்டல் காதலி

அகர்வால் அவரது காதலியின் போனிலுள்ள அந்தரங்க மெசேஜ்களை சைபர் கிரேடு போலீசார் தற்போது துப்பறிந்து வருகிறார்கள்.. இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றுள்ளது.

"நண்பர்கள் தான் என்னை பிரெயின் வாஷ் செய்தார்கள்.. அதனால்தான் இப்படியொரு தப்பை செய்து விட்டேன்" என்று நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார் அகர்வால்.. காதலியின் மோகத்திற்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காவும், சொந்த வீட்டிலேயே திருடி, அப்பாவின் நம்பிக்கையையும் குலைத்ததை நினைத்து அழுது கொண்டேயிருக்கிறாராம் அகர்வால்..

காதலிக்காக திருட்டு பணத்தில் 5 லட்சம் செலவுசெய்தாராம்.. திருடப்பட்ட மீதமுள்ள தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தை முழுமையாக மீட்கும் பணியில் காவல்துறையினர் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+