5 மாநில தேர்தல்களில் எந்த கட்சி.. எங்கே ஆட்சியை பிடிக்கும்? எங்கே தொங்கு சட்டசபை? மோடிக்கு ஷாக்!
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த கருத்து கணிப்பில் எந்த கட்சி எந்த மாநிலங்களை வெல்லும், எங்கே தொங்கு சட்டசபை உருவாகும் என்று கணிப்பு வெளியாகி உள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது. ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடந்தது. சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. தெலுங்கானா தேர்தல் நேற்று நடந்தது.

இதையடுத்து வருகின்றன டிசம்பர் 3ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன. அதற்கு முன் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.
கணிப்புகள் சொல்வது என்ன?: ஓவர் ஆல் கணிப்பு படி - ராஜஸ்தானில் காங்கிரஸ் 75-91, பாஜக 98-114, மற்றவை 9-16 இடங்களில் வெல்லும். - அதாவது பாஜக ஆட்சி அமைக்கும். அங்கே உள்ள 200 இடங்களில் 101 இடங்களில் மெஜாரிட்டி பெற வெல்ல வேண்டும்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 93-106 பாஜக 120-134மற்றவை 1-5 இடங்களில் வெல்லும். - அதாவது பாஜக ஆட்சி அமைக்கும். இங்கே 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும்
சத்தீஸ்கரில் காங்கிரஸ் 46-55 பாஜக 33-42 மற்றவை 1-5 இடங்களில் வெல்லும். - அதாவது காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். அங்கே உள்ள 90 இடங்களில் 46 இடங்களில் மெஜாரிட்டி பெற வெல்ல வேண்டும்.
தெலுங்கானாவில் பிஆர்எஸ் 44-50 காங்கிரஸ் 56-62 பாஜக 5-7 இடங்களில் வெல்லும். - அதாவது காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். அங்கே உள்ள 119 இடங்களில் 60 இடங்களில் மெஜாரிட்டி பெற வெல்ல வேண்டும்.
மிசோராமில் - எம்என்எப் 14-19, சோபிஎம் - 11-17, காங்கிரஸ் 6-10, பாஜக 1- 2 இடங்களில் வெல்லும். - அதாவது தொங்கு சட்டசபை உருவாகும். அங்கே உள்ள 40 இடங்களில் 21 இடங்களில் மெஜாரிட்டி பெற வெல்ல வேண்டும்.
மொத்த கணிப்பு; மொத்த கணிப்புப்படி மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பாஜக தக்க வைக்கும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து பாஜக அங்கே வெற்றிபெறும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சட்டீஸ்கர், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன. மிசோரத்தில் இழுபறி ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அரையிறுதி தேர்தல்: இந்த தேர்தல் கிட்டத்தட்ட அரையிறுதி தேர்தல் போல பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு வரப்போகும் டீசர் போல பார்க்கப்படுகிறது.
இதில்தான் 50- 50 வெற்றியை காங்கிரஸ் - பாஜக வெல்லும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதாவது மத்திய பிரதேசம், ராஜஸ்தானை பாஜகவும், தெலுங்கானா, சத்தீஷ்கரை காங்கிரசும் வெல்லும் என்று கணிப்புகள் தெரிவிகின்றன.
இதனால் லோக்சபா தேர்தலில் மோடிக்கு சவால் காத்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் 2 இந்தி மாநிலங்களில், அதாவது ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மிகவும் நெருக்கமான வெற்றியை பெறுகிறது. இன்னொரு பக்கம் சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியை பிடிக்க முடியாமல் போகிறது./ தென்னிந்தியாவில் ஏற்கனவே கர்நாடகாவை இழந்த பாஜக தெலுங்கானாவில் மிக மோசமான படுதோல்வியை சந்திக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன.
இதனால் லோக்சபா தேர்தலிலும் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்படுமா? மோடிக்கு அதிர்ச்சி தரும் தேர்தல் முடிவாக இது இருக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications