இப்போ வேண்டாம்.. நேரம் சரியில்லை.. பாஜக தோல்வியால் அரசியல் அறிவிப்பை தள்ளிப்போட்டாரா ரஜினி?
பாஜக 5 மாநில சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இருப்பதால், ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவதை தள்ளிப்போட்டு இருக்கிறார் என்று தகவல்கள் வருகிறது.
Recommended Video

சென்னை: பாஜக 5 மாநில சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இருப்பதால், ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவதை தள்ளிப்போட்டு இருக்கிறார் என்று தகவல்கள் வருகிறது.
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் பெரிய தோல்வியை இந்த தேர்தலில் சந்தித்துள்ளது.
இந்த தேர்தல் தோல்வி காரணமாக பாஜகவினர் பெரிய அதிர்ச்சியில் உள்ளனர். இந்த தோல்வி ரஜினியின் தொடங்கப்படாத அரசியல் பயணத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அறிவிப்பதாக இருந்தது
நடிகர் ரஜினிகாந்த இன்று அவரது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பையும், கொள்கை குறித்த அறிவிப்பையும் வெளியிடுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வந்ததாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். பிறந்த நாளை முன்னிட்டு ரஜினி அரசியல் குறித்து பேசுவார் என்று கூறப்பட்டது.

ரஜினி அதிர்ச்சி
ஆனால் ரஜினி ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் என்று கூறுகிறார்கள். பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் ரஜினி, இந்த தேர்தல் முடிவால் துவண்டு போய் இருப்பதாக கூறுகிறார்கள். ஒருவேளை பாஜகவிற்கு ஏற்பட்ட நிலைமை நமக்கும் ஏற்படுமோ என்று ரஜினி நினைப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பேட்டி கொடுத்தார்
இதன் காரணமாகத்தான் இதுபோன்ற விஷயங்களில் அமைதியாக இருக்கும் ரஜினி நேற்று பேட்டி கொடுத்தார். ரஜினி பாஜக குறித்து நேற்று வெளியிட்ட கருத்தில், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜக செல்வாக்கு இழந்ததை காட்டுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு, என்று பாஜகவிற்கு எதிராக 5 மாநில தேர்தல் முடிவுகள் என்று தெரிவித்துள்ளார்.

தள்ளிப்போட முடிவு
பாஜக 5 மாநில சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இருப்பதால், ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவதை தள்ளிப்போட்டு இருக்கிறார் என்று தகவல்கள் வருகிறது. இன்று அரசியல் குறித்து பேச நினைத்த ரஜினி அதை தள்ளிப்போட முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. போட்டு வைத்திருந்த திட்டங்களை எல்லாம் ரஜினி ஒத்திவைத்துவிட்டதாக கூறுகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications