கனவு காணும் வாழ்க்கை யாவும்.. எச்.ராஜா எவ்வளவு ஆசையா இப்படி டிவிட் பண்ணிருப்பார்!
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா 4 நாட்களுக்கு முன் செய்த டிவிட் ஒன்று பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video

சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா 4 நாட்களுக்கு முன் செய்த டிவிட் ஒன்று பெரிய வைரலாகி உள்ளது.
ஒரு வழியாக ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் பாஜக நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்றுதான் கூற வேண்டும்.
5 மாநில தேர்தலில் ஒன்றில் கூட பாஜக வெற்றி அடையவில்லை. மத்திய பிரதேசத்தில் மட்டும் வெற்றிக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டு சென்றுவிட்டது.

பெரிய வைரல்
மற்றபடி ராஜஸ்தான், மிசோரம், சட்டீஸ்கர், தெலுங்கானா தேர்தல்களில் மிக மோசமான தோல்வியை பாஜக தழுவி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா 4 நாட்களுக்கு முன் செய்த டிவிட் ஒன்று பெரிய வைரலாகி உள்ளது.

என்ன சொன்னார் தெரியுமா?
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நான்கு நாட்களுக்கு முன் செய்த டிவிட்டில் '' மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சிதான். 4 நாட்கள் சிலர் கனவு காணட்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

யாரை கிண்டல்
காங்கிரஸ் மற்றும் மற்ற சில மாநில கட்சிகளை கிண்டல் செய்யும் விதமாக அவர் இப்படி குறிப்பிட்டார். ஆனால் தேர்தல் முடிவுகள் அப்படியே தலைகீழாகி இருக்கிறது.

நெட்டிசன்ஸ் வைரல்
முக்கியமாக எச்.ராஜா குறிப்பிட்ட ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் வென்றுள்ளது. மத்திய பிரதேசத்திலும் வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்த நிலையில் எச்.ராஜா கண்ட கனவுதான் தற்போது கலைந்து போய்விட்டதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications