+2 பொதுத் தேர்வு! 50,000 மாணவர்கள் தமிழ் தேர்வில் ஆப்செண்ட்! தமிழ்நாட்டில் தமிழுக்கு வந்த சோதனை!
இதென்ன தமிழ்நாட்டில் தமிழுக்கு வந்த சோதனை
சென்னை: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில் 50,674 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வை பொறுத்தவரை தமிழ்நாட்டில் தமிழ் மொழிப் பாடத்துக்கு வந்த சோதனையாகவே பார்க்கப்படுகிறது.
இவ்வளவு பேர் ஏன் தமிழ் தேர்வை எழுத வரவில்லை, என்ன காரணங்கள் என்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

+2 பொதுத் தேர்வு
இந்த ஆண்டுக்கான +2 பொதுத் தேர்வு நேற்று முன் தினம் 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. இந்த தேர்வை லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதும் நிலையில் 50,674 பேர் தமிழ் பரீட்சையை எழுத வரவில்லை. கடந்தாண்டு தமிழ் தேர்வை 32,000 பேர் எழுத வராத நிலையில் இந்தாண்டு அதன் எண்ணிக்கை கூடுதலாக உயர்ந்திருப்பது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

என்ன காரணம்?
இதனிடையே இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தேர்வெழுத வரவில்லை, தனியார் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தேர்வெழுத வரவில்லை, அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அதிகாரிகள். இந்த நிகழ்வை பொறுத்தவரை தமிழ்நாட்டில் தமிழ் மொழிப் பாடத்துக்கு வந்த சோதனையாகவே பார்க்கப்படுகிறது.

தேர்வெழுத பயம்
தேர்வு எழுத பயம், இன்புளூயன்ஸா வைரஸ் பரவுவதால் ஏற்படும் உடல்நலமின்மை, உள்ளிட்ட காரணங்கள் மேலோட்டமாக கூறப்பட்டாலும் அதற்காக 50,674 பேர் தேர்வை புறக்கணித்திருப்பது மிகத் தீவிரமாக ஆராயப்பட வேண்டிய விவகாரமாக பார்க்கப்படுகிறது. தமிழ் மொழிப் பாடத்திற்கே இந்த நிலை என்றால் இன்னும் கணக்கு, அறிவியல், உள்ளிட்ட பாடங்களின் தேர்வில் எத்தனை பேர் ஆப்செண்ட் ஆகப் போகிறார்களோ என்ற பதைபதைப்பு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

பேசு பொருள்
தமிழ்நாட்டில் தமிழ் மொழி பாடத்தை இத்தனை பேர் புறக்கணித்திருப்பது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனிடையே எங்கே குளறுபடிகள் நிகழ்ந்துள்ளது என்பதை விசாரணை மூலம் கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications