ஆரம்பமே கில்லி.. 2 நாளில் 50 லட்சம் உறுப்பினர்கள்.. வியக்க வைத்த விஜயின் தமிழக வெற்றிக் கழகம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை விஜய் வீடியோ வாயிலாக அறிமுகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து மளமளவென தவெகவில் உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இதுவரை 50 லட்சம் பேர் தவெகவில் உறுப்பினராக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், புதிதாக கட்சியை தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியில்லை என்றும் வருகிற சட்டமன்ற தேர்தல் தான் டார்கெட் என்றும் கூறினார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் கட்சியில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சேர்க்கும் வகையில் பலதரப்பட்ட பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது.

விருப்பப்பட்டீர்கள் என்றால் சேருங்கள்: 2026 -ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் களம் இறங்க கொண்டு கட்சி உறுப்பினர்கள் மட்டும் பொதுமக்கள் சேர்க்கையை அதிகப்படுத்த கட்சி சார்பில் புதிய செயலி ஒன்றை இன்றைய தினம் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, பெண்கள் தினமான கடந்த 8 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், உறுப்பினராக சேர்வதற்கான இணையதள லிங்கை வெளியிட்டார்.
மேலும் கட்சியின் உறுப்பினராக சேர்ந்த விஜய் வீடியோ வாயிலாக கோரிக்கையையும் வைத்தார். அந்த வீடியோவில் விஜய் கூறியதாவது:- தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் எடுத்துவிட்டேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி வரப்போகும் சட்டமன்ற தேர்தலை நோக்கி.. என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய.. எங்கள் கட்சியினுடைய உறுதிமொழியை படிங்க.. எல்லாருக்கும் பிடித்தது என்றால்.. விருப்பப்பட்டீர்கள் என்றால் சேருங்கள்" என்று கூறியுள்ளார்.
இணையதள லிங்குகள்: விஜய் இப்படி கூறி வீடியோ வெளியிட்டதோடு, தமிழ்நாட்டு மக்களின் வெற்றிக்கான நமது பயணத்தில், தோழர்களாக இணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால் நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை QR-Code இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் எளிய முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி வாட்ஸ் அப், டெலிகிராம், செல்போன் எண் மூலமாக இணைய லிங்கையும் கொடுத்தார்.
1) WhatsApp users - https://bit.ly/tvkhq
2) TelegramApp users - https://t.me/tvkvijaybot
3) WebApp users - https://bit.ly/tvkfamily
4) Send WhatsApp message as 'TVK' to 09444-00-5555
அதன்படி மேற்கண்ட லிங்க் மூலமாகவும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுபினராக சேரலாம் என்று தெரிவித்து இருந்தார்.
50 லட்சம் உறுப்பினர்கள்: விஜய் இப்படி வீடியோ வெளியிட்ட அடுத்த நொடியே அந்த வீடியோ இணையத்தை அதிர வைத்தது. அனைத்து சமூக வலைதளங்களிலும் விஜயின் இந்த பதிவு வைரலாக பரவியது. அதோடு மட்டுமின்றி, மளமளவென விஜய் ரசிகர்கள், பொதுமக்கள் உறுப்பினர் அட்டையை பெற ஆர்வம் காட்டினர். அதிகம் பேர் ஒரே நேரத்தில் உறுப்பினர் அட்டை பெற குவிந்ததால் அந்த செயலியே முடங்கி போனது.
கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேலாக இணையதளம் முடங்கியதால், இது தொடர்பாகவும் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழக வெற்றிக் கழகத்தில் 26 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று மதியம் 1.30 மணி வரை 50 லட்சம் பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி: கடந்த 8 ஆம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் இதுவரை 50 லட்சம் பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணைந்துள்ளனர் என்று அதன் துணை செயலர் தெரிவித்துள்ளார். இதில், உறுப்பினர் சேர்க்கை செயலி மூலமாகதான் அதிகம்பேர் உறுப்பினர் அடையாள அட்டையை பெற்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் அடையாள அட்டையை பெற்ற பலரும் தங்களது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் வைத்ததையும் பார்க்க முடிந்தது. முன்னதாக சென்னை பனையூரில் உள்ள த.வெ.க கட்சி தலைமை அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு தவெக கட்சியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications