ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ரூ.50 லட்சம்..அக்கவுண்டில் போட்ட பெண்? போலீசுக்கு கிடைத்த க்ளூ.. அடுத்த ப்ளான்?
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் வங்கிக் கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். குறிப்பாக கைதானவர்களுக்கு பெண் ஒருவர் வங்கிக் கணக்கில் இருந்து 50 லட்சம் பரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், கொலையாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு, பின்னர் பெரம்பூர் அரசு பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்பட்டது. கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி, ஆணையம் விசாரணையை துவக்கியுள்ளது. அந்த ஆணையத்தில், சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே , காவல் அதிகாரிகள் ஐஜி ரூபேஷ் குமார் மீனா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும்,சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திர நாயர், புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோரிடமும் விசாரணைநடத்தப்பட்டது. மேலும் அரசு சார்பில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் செயலாளர் லஷ்மி பிரியாவும் ஆணையத்தில் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கொலைக்கு மேலும் பலர் பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுவதால் எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆர்காடு சுரேஷின் தம்பி பாலுவின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவரது ஆறு மாத வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை வங்கிகளிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது .இதனால் இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தற்போது ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் வங்கிக் கணக்குகளை, வங்கி அதிகாரிகள் உதவியுடன் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அதிக அளவில் பணப்பரிவர்த்தனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு பெண் ஒருவர் வங்கிக் கணக்கில் இருந்து ₹50 லட்சம் பரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த பெண் யார் என? தெரிந்து கொள்வதற்காக 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, அருள் மற்றும் திருமலை ஆகிய 3 பேரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு கூடுதலாக 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் நீதிமன்றத்தை நாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications