24 பெட்டிகளுடன் சென்னையில் ரெடியாகும் 50 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்! பயணிகளுக்கு செம சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் தற்போது ஒரே ஒரு வழித்தடத்தில் மட்டுமே வந்தே பாரத் ரயில் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், 24 பெட்டிகளுடன் விரைவில் 50 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரிக்க சென்னையில் உள்ள ஐசிஎஃப் முடிவு செய்துள்ளதாம். இரவு நேரத்திலும் தொலை தூரங்களுக்கும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதி நவீன சொகுசு வசதிகள் கொண்டதாகவும், முழுவதும் ஏசி வசதியும் இருப்பதால் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

50 Vande Bharat Sleeper trains work going on full swing in Chennai - Railway gears up manufacturing

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்

தற்போது வந்தே பாரத் இருக்கை வசதி கொண்ட ரயில்களே பெரும்பாலான வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. முழுவதும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் ஹவுரா - காமாக்யா (கவுகாத்தி) வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் நிலையில், தொலை தூரங்களில் செல்லும் பயணிகளின் கோரிக்கையை ஏற்று வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அதிக அளவில் இயக்க ரயில்வே முடிவு செய்தது. அதன்படி 50 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கும் பணியை சென்னையில் உள்ள ரயில்வே பெட்டி தொழிற்சாலையில் விரைவில் தொடங்க உள்ளது.

இந்த வந்தே பாரத் ரயில்கள் 24 பெட்டிகளுடன் தயாரிக்கப்பட உள்ளது. தற்போது உள்ள வந்தே பாரத் ரயில்கள் 16 பெட்டிகள் கொண்டதாகவே உள்ளன. 24 பெட்டிகளுடன் இயக்கப்பட்டால் கூடுதல் பயணிகள் பயணிக்க முடியும் என்பதால் பயணிகளுக்கு ரயில்வேயின் இந்த முடிவு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தொலைதூரங்களுக்கு இந்த ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. இதனால் 24 மணி நேர பயணம் என்றாலும் கூட அலுப்பு இன்றி செல்ல முடியும். இது குறித்து ஐசிஎஃப் பொது மேலாளர் மனிஷ் அகர்வால் கூறியதாவது:-

பெட்டிகள் எப்படி இருக்கும்?

"முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில் பெட்டிகளுக்கான வரைபட தயாரிப்புகள் முடிந்துள்ளன. இந்த டிசைன்கல் பெட்டிகள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கானது. இதில், பெட்டிகளின் கட்டமைப்பு, பெட்டிகளை இணைக்கும் அமைப்புகள் மற்றும் பெட்டிகளின் கீழ் பகுதியில் இடம் பெற வேண்டிய உபகரணங்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்" என்றார்.

வந்தே பாரத் ரயிலில் முக்கிய அம்சங்கள்

தற்போது இயக்கப்படும் 16 பெட்டிகள் கொண்ட ரயிலுக்கு பதிலாக 24 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் பயன்பாட்டுக்கு வந்தால், 1.5 மடங்கு பயணிகள் கூடுதலாக பயணிக்க முடியும். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தொலை தூர இடங்கள் மட்டுமின்றி இரவு நேர பயணத்திற்கும் இயக்கப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது உள்ள வந்தே பாரத் ரயில்கள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படுகின்றன. இரவு நேர பயணம் என்றால் பயணிகள் தூங்கி எழுவதற்குள் சொந்த ஊருக்கு செல்ல முடியும் என்பதால் பயணிகளிடையே இதற்கு வரவேற்பு பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

24 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்க திட்டமிடப்பட்டு இருந்தாலும் இன்னும் எத்தனை பெட்டிகள் முதல் வகுப்புக்கு இடம் பெறும்? என்ற விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், ரயில்வே வட்டார தகவல்கள் கூறும் போது, 17 ஏசி மூன்று அடுக்கு படுக்கை கோச்கள், 5 இரண்டு அடுக்கு படுக்கை பெட்டிகள் ஒரு முதல் வகுப்பு பெட்டி, ஒரு பேண்ட்ரி பெட்டி என இயக்கப்படலாம் என்று கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+