இவருமா?.. முதல்வர் ஸ்டாலின் வரை பறந்த நிலக்கரி புகார்கள்.. மாஜிக்கு செக் வைக்கும் செந்தில் பாலாஜி?
காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்
சென்னை: "நிலக்கரியை பொறுத்த வரைக்கும் வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் முதல்வரின் அனுமதிபெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.. அதில் நிறைய வித்தியாசம் இருக்கிறது.. இந்த புகார்களின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் அரசில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தள்ளார்.. அத்துடன், மின்வாரியத்தில் காலியாகவுள்ள 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி தந்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது காலியாக இருக்கும் அரசுத்துறை பணியிடங்களை நிரப்புவது குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன..
அந்த வகையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அரசு போக்குவரத்து துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தார்..

காலிப்பணியிடம்
இதையடுத்து, மின்சார வாரியத்தில் காலியாக இருக்கும் 55 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி தந்துள்ளார். சென்னை, அண்ணாசாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி, மானியகோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

அலுவலகம்
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது சொன்னதாவது: "மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 17 தொழிற்சங்க சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மின்வாரியத்தில் 1 லட்சத்து, 45 ஆயிரம் பணியிடங்களில் ஏறத்தாழ 55 ஆயிரம் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்ப வேண்டும் என கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் முன் வைத்து இருக்கிறார்கள்.

ஆலோசனைகள்
இந்த கோரிக்கைகள் அனைத்தும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்.. பிறகு காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.. அதேநேரத்தில் தமிழகம் முழுவதும் பழுதடைந்துள்ள சுமார் 8900 மின்மாற்றிகள் விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

கண்டிப்பு
நிலக்கரியை பொறுத்த வரைக்கும் வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் முதல்வரின் அனுமதிபெற்று ஆகஸ்ட் 2 அன்று ஒரு குழு அமைக்கப்பட்டது. கடந்த 2 தினங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி பதிவிற்கும், இருப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று சொன்னோம்... தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் அரசில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

ஆய்வு
கடந்த வாரம், வடசென்னை எண்ணூர் அனல் மின்நிலையத்தில் 2வது அலகை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்... செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டது. அப்படி சரிபார்க்கபட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும், இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது... அதாவது, 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல் பதிவேட்டில் மட்டும் உள்ளது. இந்த பதிவேட்டு முறை நடப்பு ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை எடுக்கப்பட்டது.

தண்டனை
இருப்பில் இல்லாத நிலக்கரியின் மதிப்பு ரூ.85 கோடி ஆகும். நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எனவே இந்த தவறில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று கூறியிருந்தார்.. அமைச்சரின் இந்த புகாருக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி ஒரு விளக்கம் தந்தார்.. அதில், "அதிமுக அரசு எடுத்த கணக்கைதான் அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார்..

பயம்
கடந்த ஆட்சியிலேயே 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என்று கணக்கெடுத்தோம்... எனக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை. மானிய கோரிக்கையின் போது வாய்ப்பளித்தால் சட்டசபையில் விளக்கம் அளிக்க தயார் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதே குற்றச்சாட்டை செந்தில் பாலாஜி மீண்டும் தெரிவித்திருப்பதுடன், நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளது முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.
-
கடலூர் மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்!












Click it and Unblock the Notifications