6 சந்தேகங்கள்.. லெட்டரை பார்த்ததும் மாறிய முகம்.. தேர்தல் ஆணையத்தால் உடைந்து நொறுங்கிய எடப்பாடி டீம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கம்.. 50 ஆண்டுகளை கடந்த இயக்கம் என்றெல்லாம் அதிமுகவை அதன் மூத்த தலைவர்கள் கொண்டாடிக்கொண்டு இருக்க.. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை தற்போது கட்டுப்படுத்துவது யார் என்ற கேள்வி கட்சி தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது. நான்தான் உண்மையான தலைவர் என்று எடப்பாடி சொல்ல.. நான்தான் உண்மையான தலைவர்கள் என்று ஓபிஎஸ் சொல்ல.. வீட்டில் ஆண் பிள்ளைகள் அடித்துக்கொண்டால் அம்மாதான் கேள்வி கேட்க வேண்டும், என்று சசிகலா தன்னை தலைவராக முன்னிறுத்த என்று கட்சி பல சில்லுகளாக உடைந்து இருக்கும் சில்லு கருப்பட்டியாக உருகிக்கொண்டு இருக்கிறது!

இப்படிப்பட்ட அதிமுகவின் தலைவர் யார் என்ற குழப்ப தீயில் ஒன்றரை லிட்டர் "க்ரிஷ்ணாயிலை" ஊற்றிவிட்டு சென்று இருக்கிறது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையம் எழுதிய கடிதம் ஒன்று எடப்பாடி தரப்பை அதிர்ந்து, நொறுங்க வைத்துள்ளது.

நான்தான் பொதுச்செயலாளர் என்று உற்சாகமாக இருந்த எடப்பாடியை.. தட்டி உட்கார வைத்து ஓ பன்னீர்செல்வத்திற்கு அங்கீகாரம் கொடுத்து தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் அனுப்பிய இந்த கடிதம் அதிமுகவில் குழப்பத்தை தீர்ப்பதற்கு பதிலாக கலங்கி இருந்த குட்டையில் கல்லை வீசி மேலும் குட்டையை குழப்பி உள்ளது. அப்படி என்னதான் நடந்தது?

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு

ஓ பன்னீர்செல்வம் அனுமதி இல்லாமல் அதிமுக பொதுக்குழுவை கூட்டி, அந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது எல்லோரும் அறிந்ததே. இதற்கு எதிராக அரை டஜன் வழக்கு விசாரணைகள் நடந்து தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு சென்று இருப்பதும், நாளை மறுநாள் விசாரணை நடப்பதும் எல்லோரும் அறிந்ததே. இந்த வழக்கிற்கு இடையில்தான் சமீபத்தில் அதிமுகவில் சில சம்பவங்கள் நடைபெற்றன. அது என்னென்ன விஷயங்கள் என்று வரிசையாக பார்க்கலாம். விஷயம் 1- ஜி 20 கூட்டம் தொடர்பான ஆலோசனையில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி சென்றார். பாஜகவிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு நிலவும் நிலையில் இந்த டெல்லி பயணம் அதிக கவனம் பெற்றது.

கூட்டம்

கூட்டம்

இந்த கூட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கீழ், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து கிட்டத்தட்ட மத்திய அரசு இவரை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டதாக வாதங்கள் வைக்கப்பட்டன. இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. 2வது விஷயம் - எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எடப்பாடி தரப்பினர் கொண்டாடி வருகிறார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் என்று கையெழுத்துப் போட்டு தாக்கல் செய்த வரவு செலவு கணக்கை அக்டோபர் 3-ந்தேதி ஒப்படைக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் கொடுத்த ஒப்புகையை (அக்கனாலெட்ஜ்மெண்ட்) தேர்தல் ஆணையம் தங்கள் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஒப்புகை

ஒப்புகை

3வது விஷயம் - ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்ய மத்திய சட்ட அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு சென்றுள்ளது. அந்த வகையில் அதிமுகவிற்கும் அழைப்பு சென்றுள்ளது. இதில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் அழைப்பு சென்றுள்ளது. ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு செல்லாத நிலையில் எடப்பாடிக்கு மட்டும் அழைப்பு சென்றுள்ளது. இதை எல்லாம் பார்க்கும் போது எடப்பாடிதான் இடைக்கால பொதுச்செயலாளர் என்றுதான் தொண்டர்கள் நினைப்பார்கள். மாஜி அமைச்சர்களும் இதைத்தான் நினைப்பார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் இதில் இன்னொரு ட்விஸ்ட் கொடுத்துள்ளது.

ட்விஸ்ட்

ட்விஸ்ட்

அதன்படி, புலம் பெயர்ந்தோருக்கு அந்தந்தப் பகுதிகளில் வாக்களிக்க வசதி செய்யும் ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்து விளக்கம் கேட்க அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. ஜனவரி 16ம் தேதி நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை எடப்பாடி தரப்பினர் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்கு தற்போது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பதில் அளித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையத்திடம் இந்த தகவல்தான் உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய ஆவணத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதில், அதிமுகவில் இன்றைய தேதி வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

குழப்பம்

குழப்பம்

இந்த கடிதம் வந்ததும் எடப்பாடி தரப்பு அதிர்ந்து போய் உள்ளது. கடிதத்தை பார்த்ததும் எடப்பாடி மற்றும் அவரின் அணி கடும் கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த கோபம் காரணமாகவே இந்த கடிதத்தை எடப்பாடி தரப்பினர் திருப்பி அனுப்பி உள்ளனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தொண்டர்களுக்கு பல தார்மீக கேள்விகளை இந்த கடிதம் எழுப்பி உள்ளது.

கேள்வி 1- அதிமுகவில் இப்போது இருக்கும் பதவி இடைக்கால பொதுச்செயலாளர் பதவியா அல்லது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியா?

கேள்வி 2 - தமிழக தேர்தல் ஆணையம் சொல்வது போல ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இருப்பதாக வைத்துக்கொண்டால், ஓபிஎஸ் கையெழுத்து போடாத கணக்கு வழக்குகளை எப்படி தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.

கேள்வி 3 - தமிழக தேர்தல் ஆணையம் சொல்வது போல ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இருப்பதாக வைத்துக்கொண்டால், சட்ட ஆணையம் எப்படி எடப்படியிடம் மட்டும் ஒரு நாடு ஒரு தேர்தல் பற்றி கேட்கலாம்?

கேள்வி 4 - மத்திய அரசு எப்படி எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று ஜி 20 கூட்டத்திற்கு அழைக்கலாம்?

கேள்வி 5 - தமிழக தேர்தல் ஆணையம் சொல்வது போல ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இருப்பதாக வைத்துக்கொண்டால், எடப்பாடி செய்த நியமனங்கள், நீக்கங்கள் எல்லாம் பாதிக்கப்படாதா?

கேள்வி 6- ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என்றால், அவர் மேற்கொண்ட மாவட்ட செயலாளர்கள் நியமனங்கள் செல்லுமா? உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+