“ஷாக்”.. சிஎஸ்கேவில் ஒரு தமிழர் கூட இல்லை.. 6 மகாராஷ்டிரா,3 ஆந்திர வீரர்கள்! யார் யார் எந்த மாநிலம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு வீரர் கூட தமிழர் இல்லை என்பதால் அந்த அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ. தமிழ்நாடு சட்டசபையில் கோரிக்கை விடுத்தது விவாதப் பொருளாகி இருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியில் இடம்பெற்று இருக்கும் வீரர்களின் சொந்த மாநிலங்கள் என்னவென்று பார்ப்போம்.

சர்வதேச அளவில் பல நாடுகளில் கிரிக்கெட் லீக் தொடர்கள் ஐபிஎலுக்கு முன்பாகவே நடத்தப்பட்டு வந்தாலும், 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் வருகைக்கு பிறகு, அனைத்தையும் விட அதிக ரசிகர்களை கொண்ட, அதிக பணம் புழங்கும் கிரிக்கெட் லீகாக உருவெடுத்தது.

6 Maharashtra players in CSK - Let we know the states of CSK players

அதற்கு காரணம் இந்தியா மக்கள் மத்தியில் கிரிக்கெட் மீது இருக்கும் பற்று மற்றும், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், தோனி, கங்குலி, ஜாக் காலிஸ், கில்கிரிஸ்ட், ஹெய்டன், பீட்டர்சன், பிரட் லீ, ஃப்ளெம்மிங், முரளிதரன், சங்ககரா, அப்ரிடி என அப்போது உலக கிரிக்கெட்டில் ஹீரோக்களாக திகழ்ந்தவர்கள் ஐபிஎலில் விளையாடியதுதான்.

இப்படி அதிக ரசிகர்களை கொண்ட தொடரில் விளையாடும் அணிகளிலேயே கூடுதல் ரசிகர்களை கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. அதற்கு காரணம் கேப்டன் தோனியும், தமிழ்நாடு மக்கள் அவர் மீது கொண்டு இருக்கும் அன்பும்தான். உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது. இதில் தொடக்கத்தில் தமிழ்நாட்டை அஸ்வின், முரளி விஜய், அணிருதா ஸ்ரீகாந்த், பத்ரிநாத் உள்ளிட்ட தமிழ்நாடு வீரர்கள் விளையாடி உள்ளனர்.

கடந்த சீசனில் ஜெகதீசன் சென்னையில் இடம்பெற்றார். ஆனால் அவருக்கு ஆடும் அணியில் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவ வீரர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. நேற்று தமிழ்நாடு சட்டசபையில் பேசிய பாமக எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன், தமிழர்களே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

சென்னை வீரர்களின் மாநிலங்கள்: இந்த நிலையில் சென்னை அணியில் இடம்பெற்று இருக்கும் வீரர்களின் மாநிலங்களை பார்ப்போம். கேப்டன் தோனி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். ருதுராஜ் கெய்க்வாட் - மகாராஷ்டிரா, அஜிங்க்யா ரஹானே - மகாராஷ்டிரா, ஷிவம் துபே - மகாராஷ்டிரா, ரவீந்திர ஜடேஜா - குஜராத், தீபக் சாஹர் - உத்தரப்பிரதேசம், துஷார் தேஷ்பாண்டே - மகாராஷ்டிரா, அம்பதி ராயுடு - ஆந்திரா, ஆகாஷ் சிங் - ராஜஸ்தான், சுப்ரான்சு சேனாபதி - ஒரிசா, ஆர்எஸ் ஹன்ஸ்கேட்கர் - மகாராஷ்டிரா, ஷேக் ரஷீத் - ஆந்திரா, அஜய் ஜாதவ் மண்டல் - சத்தீஸ்கர், பிரசாந்த் சோலங்கி - மகாராஷ்டிரா, சிமர்ஜீத் சிங் - டெல்லி, பகத் வர்மா - ஆந்திரா, நிஷாந்த் சிந்து - அரியானா.

மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். சிசாண்டா மகாலா, டுவேன் பிரிடோரிய ஆகியோர் தென் ஆப்பிரிக்கா வீரர்கள், மஹீஷ் தீக்சானா, மதீஷா பதிரானா ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள். சாண்ட்னர் நியூசிலாந்தை சேர்ந்தவர்.

6 Maharashtra players in CSK - Let we know the states of CSK players

இதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 6 வீரர்களும், ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த 3 வீரர்களும் சென்னை வீரர்களும் இடம்பெற்று இருக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் கூட தமிழ்நாட்டின் தலைநகரத்தின் பெயரை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறவில்லை. இன்று சென்னை அணியை எதிர்த்து விளையாடக் கூடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில்கூட ரவிச்சந்திரன் அஸ்வின், முருகன் அஸ்வின் ஆகிய தமிழ்நாட்டு வீரர்கள் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+