அடுத்த டார்கெட் 6 அமைச்சர்கள்.. திட்டம் போடும் டெல்லி.. ஸ்டாலினின் நம்பர் 2 விற்கும் குறி.. அதிருதே
சென்னை: பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நிலையில்.. திமுகவில் அடுத்த டார்கெட் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லிக்கு நெருக்கமான வட்டாரங்கள் சில முக்கிய தகவல்களை வெளியிட்டு உள்ளன.
பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என்று கூறி.. அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடி மற்றும் மனைவி விசாலாட்சி, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று கை கூப்பி கோரிக்கை விடுத்தார்.

அதற்கு தங்களுக்கு மேல் உள்ள நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம் என நீதிபதி தெரிவித்தார். தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏவாக பதவி வைக்கும் தகுதியை இழந்துவிட்டார்.
அமைச்சரவை மாற்றம்: அதோடு 30 நாட்கள் அவகாசம் அவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அதுவரை உயர் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அமைச்சர் பொன்முடி வசம் இருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு கூடுதலாக பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
அடுத்த டார்கெட்: திமுகவில் அடுத்த டார்கெட் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லிக்கு நெருக்கமான வட்டாரங்கள் சில முக்கிய தகவல்களை வெளியிட்டு உள்ளன.
அதன்படி, பாஜகவை எப்படி வேண்டுமானாலும் எதிர்க்கலாம். அடித்து ஆடலாம். டிபன்ஸ் ஆடலாம். கொஞ்ச நாள் அமைதியாக இருக்கலாம். பாஜகவிற்கு அப்படி பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. இத்தனை காலம் ஸ்டாலின் அமைதியாக இருந்தார். இனி ஸ்டாலின் திருப்பி அடிப்பார். பொன்முடிக்கு அடுத்து ஏ. வ வேலு குறி வைக்கப்பட உள்ளது. அவரிடம் மீண்டும் ரெய்டு நடத்த வாய்ப்பு உள்ளது. அது திமுகவிற்கு மேலும் பிரஷரை கொடுக்கும். திமுக மீது திட்டமிட்ட தாக்குதலை டெல்லி நடத்துகிறது .
முறையாக திட்டமிட்டு.. திமுகவிற்கு டெல்லி பிரஷர் கொடுக்கிறது. அதில் இருந்து எப்படி தப்பிப்பது, பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார். அதில் ஒரு ஐடியாதான் அமைச்சரவையை மாற்றுவது. தற்காலிமாக அமைச்சரவையை மாற்றலாம். 2024ல் கண்டிப்பாக ஆட்சி மாறும். அதுவரை இப்படி செய்யலாம் என்று ஸ்டாலின் இருக்கிறார்.
ஏ வ வேலு விசாரணை: அடுத்து ஏ வ வேலு விசாரணைக்கு உள்ளாவார் . திமுகவில் அவர்தான் நம்பர் 2. அவரை டெல்லி குறி வைக்கிறது. அதிமுக காலத்திலேயே டாஸ்மாக் முறைகேடு தொடங்கி மணல் முறைகேடு வரை எல்லாம் நடந்தது. அதிமுக காலத்தில் நடந்தது தற்போதும் அது தொடருகிறது. தற்போது இது திமுக என்பதால் அமலாக்கத்துறை உள்ளே வந்துள்ளது. அமலாக்கத்துறைக்கு பவர் உள்ளது என்பதால் அவர்கள் இதை கணக்கிடுகிறார்கள்.
6 பேர் சிக்கல்: அடுத்து கே.என் நேரு மீது விசாரணை நடக்கலாம். கேகேஎஸ்எஸ்ஆர், ஐ பெரியசாமி ஆகியோர் மீதும் விசாரணை நடக்கலாம். பொன்முடி, துரைமுருகன், கே. என் நேரு, ஐ பெரியசாமி, ஏ வ வேலு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகிய 6 பேர் சிக்கலில் உள்ளனர். இவர்கள் 6 பேர் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம், என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications