தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

    கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

    6 more positive cases of Coronavirus found in Tamilnadu

    இன்றைய தினம் தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக இருந்தது. மதுரையைச் சேர்ந்த நபர் கொரோனாவால் இறந்ததை அடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவரின் எண்ணிக்கை 1 ஆக உள்ளது.

    மதுரை, ஈரோடு, சென்னையைச் சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் தாய்லாந்திலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த இருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. அது போல் மதுரையில் கொரோனாவால் உயிரிழந்த 54 வயது நபரின் குடும்பத்தினர் இருவருக்கும் சென்னையில் கொரோனா வந்தவருடன் பழகிய இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து தமிழகத்தில் இன்று இரவு மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 73 வயது மூதாட்டி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் இந்தோனேஷியா நாட்டினருடன் தொடர்பில் இருந்த 61 வயது ஆண் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 39 வயது இளைஞர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+