அமைச்சரின் மகன்-பேரனை தாக்கியது ஏன்? சரணடைந்த 6 பேர் பரபர வாக்குமூலம்.. தியேட்டரில் நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் மகன், பேரன் மீது திரையரங்கில் வைத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 6 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்? என்பது பற்றி அவர்கள் போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக இருப்பவர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். இவரது மகன் பெயர் ரமேஷ். பேரன் பெயர் கதிர்.
இந்நிலையில் தான் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பார்க்க ரமேஷ், கதிர் ஆகியோர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்குக்கு சென்றனர். தியேட்டரில் அவர்கள் இரவு நேர காட்சியை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்த 6 பேருக்கும், ரமேசுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனை முற்றவே அந்த கும்பல் ரமேஷ் மற்றும் கதிரை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றது.
இதில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் மகன் ரமேஷ் மற்றும் பேரன் கதிர் காயமடைந்தனர். இருவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அதாவது ரமேஷ் இருக்கைக்கு அருகே 6 பேர் அதிக சத்தம் எழுப்பி விசிலடித்து ஆபாசமாக பேசிக்கொண்டும் கூச்சலிட்டுள்ளனர். இதனால் மற்றவர்களுக்கு படம் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரமேஷ் அவர்களை கொஞ்சம் அமைதியாக இருந்து படம் பார்க்கும்படி கூறிய நிலையில் தகராறு ஏற்பட்டு அவர்கள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அமைச்சரின் குடும்பத்தினர் என்பதால் இது இயல்பான பிரச்சனையில் தாக்குதல் நடத்தப்பட்டதா? இல்லாவிட்டால் பின்னனியில் பிற காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமானது. இந்நிலையில் தான் அமைச்சரின் மகன், பேரன் ஆகியோரை தாக்கிய 6 பேர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இரவில் வழக்கறிஞருடன் சென்று சரணடைந்தனர்.
ராகுல், ரகு, அனு, கவுதம் உள்பட 6 பேர் போலீசில் சரணடைந்த நிலையில் தியேட்டரில் நடந்த சம்பவம் குறித்து சில விஷயங்களை தெரிவித்துள்ளனர். அதாவது தியேட்டர் இருக்கையில் மாறி அமர்ந்த விவகாரத்தில் தகராறு ஏற்பட்டதாகவும், பிரச்சனையின்போது யாரும் மதுபானம் அருந்தியிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். தற்போது அவர்கள் 6 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications