தி நகர் முதல் ராயபுரம் வரை.. சென்னையில் 6 இடங்களில் இன்று மின்தடை.. உங்க ஏரியா இருக்கா?
சென்னை: மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது. அதன்படி திநகர், கேகே நகர், திருவான்மியூர், சோழிங்கநல்லூர், அண்ணா நகர், இராயபுரம் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகம் கழகம் (TANGEDCO) சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் 06.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தி.நகர், கே.கே. நகர், திருவான்மியூர், சோழிங்கநல்லூர், அண்ணா நகர், இராயபுரம் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
தி நகர்: மேற்கு மாம்பலம் I பகுதிக்கு உட்பட்ட நரசிம்ம தெரு, ஏரிகரை சாலை, வெங்கடாசலம் தெரு, சத்யபுரி தெரு, ஆஞ்சநேயர் தெரு ரஜா தெரு, மாணிக்கம் தெரு, தம்பையா ரோடு, ராஜாகோபாலன் தெரு, வேலு தெரு, வீராசாமி தெரு, கிரி தெரு, லட்சுமி நாராயணன் தெரு, உமாபதி தெரு, கணபதி தெரு, சக்கரபாணி தெரு, சியமளாவதனா தெரு, மாரியம்மன் கோவில் தெரு, ஜேபி தெரு, அப்பாசாமி தெரு, தனசேகரன் தெரு, அரியவுகவுட ரோடு, பிவி தெரு, நக்கீரன் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
மேற்கு மாம்பலம் II பகுதியை பொறுத்தவரை ஈஸ்வரன் கோவில் தெரு, அப்பாரெட்டி தெரு, காசிவிஸ்வநாதன் கோவில் தெரு, பட்டேல் தெரு, சத்தியநாராயணன் தெரு, ஏரிக்கரை சாலை, காமகோடி காலனி, ராமகிருஷ்ணபுரம் 1 முதல் 3வது தெரு வரை, ஆரியகவுட ரோடு, எல்லையம்மன் கோவில் தெரு, ஜோதி லிங்கம் தெரு, சீனிவாச ஐயங்கார் தெரு, முத்தாலம்மன் தெரு, பாபு பிரசாத் 1 மற்றும் 2வது தெரு, கிருஷ்ணமூர்த்தி 48 வது தெரு, பால்மோர், படவேட்டு அம்மன் கோவில் தெரு, தேவநாதன் காலனி, வண்டிகாரம் தெரு, வடிவேல்புரம் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
கேகே நகர்: கோடம்பாக்கம், டிரஸ்டு புரம், இன்பராஜபுரம், வரதராஜாபேட்டை மெயின் ரோடு, ரங்கராஜபுரம், காமராஜர் நகர், அஜீஸ் நகர், சூளைமேடு, ஆத்ரேயபுரம் தெருக்கள், கில் நகர் விரிவாக்கம், வடபழனி, ஆண்டவர் நகர், அண்ணா நெடும்பாதையில் ஒருபகுதி, அசோக் நகர், சுப்புராயன் 1 முதல் 8 வது தெரு, காமராஜர் காலனி 1 முதல் 8 வது தெரு வரை, அழகிரி நகர், சாலிகிராமம் 100அடி சாலை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் ‛பவர்கட்' ஏற்பட உள்ளது.
சோழிங்கநல்லூர்: சிட்டலப்பாக்கம், ஜெயநகர், வள்ளுவர் நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, டிவி நகர், மகேஸ்வரி நகர், டிஎன்எச்பி காலனி, மேடவாக்கம் பிளாம் ரோடு, ராயல் கார்டன், ஐஸ்வர்யா நகர், ஆர்சி நகர், பிள்ளையார் கோவில் தெரு, குளக்கரை தெரு, நெசவாளன் நகர், அண்ணா சாலை, கவுரிவாக்கம், விஜயநகர், வேளச்சேரி மெயின் ரோடு, விடுநராஜபுரம், பாலாஜி நகர், கோபாலபுரம், ஆதிநாத் அவென்யு, மாடம்பாக்கம், கோவிலஞ்சேரி, நுட்டண்சேரி மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
அண்ணாநகர்: சாந்தி காலனி, பழைய எல், ஒய் மற்றும் இசட் பிளாக், 7 வது மெயின் ரோடு, டிஎன்எச்பி குடியிருப்பு, செனாய் நகர் மேற்கு, 1 முதல் 8 வது குறுக்கு தெரு, பெரிவேரி ரோடு, கதிரவன் காலனி மற்றும் கஜலட்சுமி காலனி மற்றும் பாரதி புரம், அமைச்சரகரை பிபி கார்டன், எம்எம் காலனி, என்எஸ்கே நகர் மற்றும் ஸ்கைவாக், என்எம் ரோடு, பட்டாபிரம் மிட்டணமல்லி காந்தி ரோடு, பாலவேடு ரோடு, எம்இஎஸ் ரோடு, முத்தாபுதுபெட், டிப்பன்ஸ் காலனி உள்ளிட்ட இடங்களில் மின்சேவை இருக்காது.
ராயபுரம்: எம்சி சாலை, சிமென்டிரி சாலை, பிவி கோவில் அனைத்து தெரு, ராமன் சாலை, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, மணிகண்ட முதலி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆதாம் தெரு, மரியதாஸ் தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாதா சர்ச் தெரு, சிங்கார தோட்டம் அனைத்து தெரு, மீனாட்சி அம்மன் பேட்டை, டோபி கானா தெரு, வைகுண்ட நாடார் தெரு, சோமுசெட்டி அனைத்து தெரு, கல்மண்டபம் சாலை, வெங்கடேசன் 1 முதல் 4வது தெரு வரை, அம்மன் கோவில் 1 முதல் 8 வது தெரு வரை, ராஜகோபால் தெரு, பஜனை கோவில் தெரு, செல்வ விநாயகர் கோவில் தெரு, சோலையப்பன் பகுதி, நல்லப்ப வாத்தியார் தெரு, வள்ளுவன் தெரு மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.
திருவான்மியூர்: திருவான்மியூரை பொறத்தவரை காமராஜர் நகர், மேற்கு அவென்யு, எல்பி ரோடு, ஆவின் நகர் மெயின் ரோடு, பாரதி நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications