நம்பர் 6.. மீண்டும் அரியணையில் அமரும் திமுக.. விஜய்க்கு சான்ஸே இல்லை.. அடித்து சொல்லும் 6 சர்வே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் கூட இல்லை. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடர்பாக வரும் கருத்து கணிப்புகள் எல்லாம் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் என்று கணித்துள்ளன.

2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஓட்டத்தில், நக்கீரன், 'INSIDE ELECTION', ABP news, போல் டிராக்கர் (Poll Tracker), லோக் போல் (Lok Poll) மற்றும் அக்னி நியூஸ் சர்வீசஸ் ஆகிய 6 நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் கவனம் பெற்றுள்ளன.

Tamil Nadu 2026 Election Survey

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர், சசிகலா- ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது.

நக்கீரன் சர்வே

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு யாருக்கு வெற்றி? என்ற தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளை நக்கீரன் இதழ் வெளியிட்டு இருக்கிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 119 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருக்கும் நிலையில் ஏறக்குறைய 25 தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆச்சரியம் அளிக்கும் விதமாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆறு முதல் 21 சதவீத வாக்குகளை பெறும் எனக் குறிப்பிட்டுள்ளது. அதிமுகவும் திமுகவும் முன்னிலை பெற்றிருக்கும் தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடிக்கும் கட்சிகளின் வாக்கு வித்தியாசத்தை விட தவெக வாக்கு சதவீதம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள ரிசல்ட் முடிவுகளின் படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கரூர், திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் திமுக முன்னிலையில் இருக்கிறது. வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், விழுப்புரம், ஈரோடு, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிமுக ஓரளவு செல்வாக்கு பெறுகிறது. சேலத்தில் மட்டுமே அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.

கிட்டத்தட்ட நாற்பது சதவீதத்திற்கும் மேலாக வாக்கு திமுகவுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிகபட்சமாக கொளத்தூர், சேப்பாக்கத்தில் 58 சதவீத ஆதரவு திமுகவுக்கு இருப்பதாக நக்கீரன் சர்வே கூறுகிறது. அதே நேரத்தில் அதிமுக கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவீத ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஓமலூர் , எடப்பாடி ஆகிய தொகுதிகளில் 48 சதவீதம் வரை அந்த கட்சிக்கு ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது.

எபிபி சர்வே

வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 172 முதல் 179 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என ஏபிபி சர்வே கணித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு அதிர்ச்சி தரும் வகையிலான இடங்களே கிடைக்கும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் ஹைலைட் என்னவென்றால், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வாங்கும் வாக்கு சதவீதம் ஒருபுறம் ஆச்சரியப்படுத்தினாலும், மறுபுறம் அந்தக் கட்சிக்கு ஒரு கசப்பான உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறது.

தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 'INSIDE ELECTION' நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள், ஆளுங்கட்சியான திமுகவுக்குச் சாதகமாகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குப் பலத்த பின்னடைவாகவும் அமைந்துள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் சுமார் 1.63 லட்சம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த மெகா ஆய்வின்படி, திமுக கூட்டணி 44% வாக்குகளைப் பெற்று அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.

'INSIDE ELECTION' நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு

இதன் விளைவாக, வரும் தேர்தலில் 159 முதல் 165 தொகுதிகளைக் கைப்பற்றி திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிகிறது. மாறாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி வெறும் 33% வாக்குகளை மட்டுமே பெற்று, 64 முதல் 70 தொகுதிகளுக்குள் சுருங்கும் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது. குறிப்பாக, அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் மண்டலங்களில்கூட அக்கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்திக்கும் என்ற கணிப்பு, அக்கட்சியின் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொருபுறம், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 18% வாக்குகளைத் தன்வசப்படுத்தும் தவெக, 4 முதல் 6 தொகுதிகளைக் கைப்பற்றி சட்டமன்றத்தில் தனது கணக்கைத் தொடங்கும் எனத் தெரிகிறது. தவெக ஈர்க்கும் இந்த 18% வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவின் வாக்கு வங்கியில் இருந்தே பிரியும் என்பதால்,

அது அதிமுகவுக்குப் பெரும் இழப்பாக மாறியுள்ளது. அதே சமயம், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறையும் தொகுதிகள் எதுவும் கிடைக்காது (0 இடங்கள்) என இந்தக் கணிப்பு கூறுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், திமுகவின் ஆதிக்கம் தொடர்வதும், அதிமுகவின் வாக்கு வங்கி சரிவைச் சந்திப்பதும், தவெக ஒரு மூன்றாவது சக்தியாக உருவெடுப்பதும் 2026 தேர்தல் களத்தின் முக்கிய மாற்றங்களாக இருக்கும் என இன்சைட் எலெக்சன் சர்வே சுட்டிக்காட்டுகிறது.

லோக் போல் கணிப்பு: திமுக வெற்றி

லோக் போல் அமைப்பின் மெகா சர்வே முடிவுகள் அறிவாலயத்தை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது.

திமுக கூட்டணி: 181 முதல் 189 தொகுதிகளில் வெற்றி பெற்று, சுமார் 40.1% வாக்கு வங்கியைத் தக்கவைக்கும்.

இதில் ஹைலைட் என்னவென்றால், திமுக கூட்டணி 180 இடங்களைத் தாண்டும்போது, திமுக மட்டுமே தனித்து 140 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்புள்ளது. இதனால் 'ஆட்சியில் பங்கு' என்ற பேச்சுக்கே இடமில்லாமல், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை திமுக தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அக்னி நியூஸ் சர்வீஸ்: திமுக வெற்றி

அக்னி நியூஸின் புள்ளிவிவரங்கள் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் யோசனையைக் கொடுத்துள்ளன.

கோட்டை வசமாகும்: மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 180 இடங்களில் முன்னிலை பெற்று அசுர பலத்தைக் காட்டும்.

மண்டல வாரியான 'கிளீன் ஸ்வீப்': - சென்னை: 37-ல் 36 இடங்கள் திமுக வசமாகும். அதிமுகவிற்கு வெறும் 1 இடம் மட்டுமே!

மத்திய மண்டலம்: 37-ல் 35 இடங்களில் திமுகவின் ஆதிக்கம்.

கொங்கு & வடக்கு: அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இங்கேயும் திமுகவே முந்துகிறது. மேற்கில் 50-ல் 32 இடங்களையும், வடக்கில் 52-ல் 35 இடங்களையும் திமுக தட்டிச் செல்கிறது. இதிலும் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று கணிக்கப்பட்டு உள்ளது.

போல் டிராக்கர்: 'உச்சாணிக் கொம்பில்' உதயசூரியன்!

போல் டிராக்கர் முடிவுகளும் திமுகவிற்குச் சாதகமாகவே 'பஞ்ச்' வைக்கின்றன.

வெற்றி வாகை: திமுக கூட்டணி 172 முதல் 178 இடங்களைக் கைப்பற்றும். 42.7% வாக்கு விகிதத்துடன் அசைக்க முடியாத சக்தியாக திமுக உருவெடுத்துள்ளது.

இது எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவருக்கும் ஒரு மிகப்பெரிய சவாலான காலக்கட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று இதிலும் கூறப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+