"அவர்"தானா.. குழப்பத்திலேயே எடப்பாடி + பாஜக.. சீமான் ரெடி.. ஆச்சரிய தேமுதிக.. 6 முனையில் "கிழக்கு"
6 முனைப்போட்டிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் தயாராகி வருகிறார்கள்
சென்னை: விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்கே களம் சூடாகி வருகிறது.. அத்தொகுதி வாக்காளர்களும் 6 முனைப் போட்டியை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்..!!
தமிழகத்தின் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது ஈரோடு கிழக்கு தொகுதி.. திராவிட இயக்கத்தின் பெரியார், கணிதமேதை ராமானுஜம் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய பகுதியாகும்.. ஈரோடுக்குள்ளேயே முடிந்துவிடக்கூடிய தொகுதி இது என்பதால், விவசாயம் பிரதானமாக இங்கு இல்லை.
ஆனால், அதற்கு மாறாக, ஜவுளித்தொழில் ஆக்கிரமித்துள்ளது.. ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதியாக இருந்த நிலையில், தொகுதி சீரமைப்பின்போது, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என கடந்த 2008-ல் பிரிக்கப்பட்டது..

திருமகன்
ஒருங்கிணைந்த ஈரோடாக இருந்தபோது, அதிமுக, திமுக இரு கட்சிகளுமே இங்கு சம அளவில்தான் தேர்தல்களில் வெற்றி பெற்றுவந்தன.. ஆனால், தொகுதி சீரமைப்புக்கு பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த 2 தேர்தல்களிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணி அதாவது, ஈவிகேஎஸ் மகன் திருமகன் அபார வெற்றி பெற்றார்... திமுகவுக்கு அடுத்தபடியாக அதிமுக வலுவாக இருந்தாலும், இதற்கு அடுத்தபடியாக, நாம்தமிழர் கட்சி 3வது இடத்தையும், மநீம கூட்டணி 4 வது இடத்தையும் கடந்தமுறை பெற்றிருந்தனர்.. ஆனால், அமமுக மிக மிக குறைந்த வாக்குகளையே அப்போது பெற்றிருந்தன.

ஸ்பெஷல் ரூட்
இப்போது இந்த தொகுதிக்கு முதல்முறையாக இடைத்தேர்தல் நடப்பதால், தொகுதிக்குள் எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.. இது தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு நடைபெறும் 4-வது தேர்தல் ஆகும்.. இந்த தேர்தலில் முதலில் 5 முனைப்போட்டி எழும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக 6 முனை போட்டி உருவாகும் வாய்ப்பு எழுந்துள்ளதாக தெரிகிறது.. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால்,எடப்பாடி பழனிசாமி இன்னும் அறிவிக்கவில்லை.. ஓபிஎஸ்ஸும் தன் பங்குக்கு அறிவிப்பதாக சொல்லி உள்ளார் அவரும் அறிவிக்கவில்லை..

விஜயகாந்த்
ஆனால், நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தி, நேற்றைய தினமே தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார். இன்னும் சீமானின் நாம் தமிழர் கட்சி, தினகரனின் அமமுகவும் களத்தில் போட்டியிடுவதாக சொல்லி உள்ள நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.. தானே நேரடியாக போட்டியிடலாமா? என்று யோசிப்பதாக தினகரன் கூறியிருந்தார்.. அந்தவகையில், எப்படி பார்த்தாலும், இதுவரை 6 முனை போட்டி உறுதியாகி உள்ளது.

சீமான் ரோல்
நடக்க போவது ஒரே ஒரு தொகுதியின் இடைத்தேர்தல் என்றாலும், இங்கு வெற்றி பெறுவது அவ்வளவு எளிது கிடையாது என்று சொல்லி வருகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. திமுக கூட்டணியை எதிர்த்து, அத்தனை கட்சிகளுமே மோதுவதால், திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பிரிப்பது யார் என்பதே மிகப்பெரிய கேள்வியாகவும், எதிர்பார்ப்பாகவும் எழுந்துள்ளது.. இதில் மிக முக்கியமாக பாஜகவின் ரோல் என்ன என்பதும், ஆர்வமாக உள்ளது.. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியின் வியூகமும் உள்ளதால், அதிமுக - பாஜக - நாம் தமிழர் என்ன செய்ய போகின்றன என்பதும் ஆவலை கிளப்பி விட்டுள்ளன.

பட்டைய கிளப்புது
அதேசமயம், இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 934 பேர். பெண்கள் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 987 பேர். 3-ம் பாலினத்தவர்கள் 15 பேர். 2 லட்சம் வாக்காளர்களும் 6 முனை போட்டியை பார்க்க தயாராக உள்ளனர்.. விரைவில் கட்சி தலைவர்கள் அத்தனை பேரும் பிரச்சாரத்தை மேற்கொண்டு, பட்டைய கிளப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அந்தவகையில், ஈரோடு கிழக்கு மிகுந்த கதகதப்பில் தகித்து கொண்டிருக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications