சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டோட்டல் காலி".. திராவிட மாடலா? சசி மாடலா?.. அமித் ஷாவுக்கே செக் வைக்கும் தலைவர்.. பழனிசாமி ஒரே போடு

: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து மூத்த தலைவர் கேசி பழனிசாமி கருத்து கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "தீவிரவாதம் என்று வருகிறபோது, சாதி, மதம் கடந்து மனிதநேயத்தோடுதான் யாராக இருந்தாலும் அணுகுவார்களே தவிர, இப்படிப்பட்ட நேரத்தில் 60 சதவீதம் கிறிஸ்தவர்கள் என்று சொல்வது மிக மிக தவறு" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, மூத்த தலைவர் கேசி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்

கோவையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதல் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

மேலும், கோவையில் கார் வெடி விபத்தில் இறந்த நபரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்ஃயூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளதாகவும், இந்த தகவலை காவல்துறை இன்னும் தெரிவிக்கவில்லை, தமிழக அரசு ஏன் இந்த தகவலை வெளியிட மறுக்கிறது என்று தெரியவில்லை என்றெல்லாம் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

தேவர் ஜெயந்தி விழா.. எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லாதது ஏன்? ஜெயக்குமார் விளக்கம்! தேவர் ஜெயந்தி விழா.. எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லாதது ஏன்? ஜெயக்குமார் விளக்கம்!

 கலெக்‌ஷன்கள்

கலெக்‌ஷன்கள்

இந்நிலையில், நம் ஒன் இந்தியா தமிழுக்கு மூத்த தலைவர் கேசி பழனிசாமி ஒரு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அப்போது இதுகுறித்து விரிவாக நம்மிடம் கருத்துக்களை பதிவிட்டார்.. அந்த சுருக்கம்தான் இது: மாநில அரசு, டாஸ்மாக் கலெக்‌ஷனில் கவனம் செலுத்துகிறது என்பது உண்மைதான்.. பணவசூல் எவ்வளவு வந்திருக்கிறது என்பதில் கவனமாகவும் இருந்து வருகிறார்கள்.. அதாவது திராவிடமாடல் என்றுசொல்லிக் கொண்டே சசிகலா மாடலில் கலெக்‌ஷனை அள்ளுகிறார்கள்.. கட்சிக்காரர்களுக்கு போனஸ் கொடுக்கிற கட்சியாக திமுக மாறிவிட்டது.. அதிக கெட்ட பெயரை வாங்கிவிட்டார்கள்..

 60% கிறிஸ்தவர்கள்

60% கிறிஸ்தவர்கள்

நிறைய நகரங்களில் பாலங்கள் முழுமையாக கட்டப்படாமல் பாதியிலேயே நிற்கிறது.. சாலைகளும் பாதியிலேயே வேலை முடிக்கப்படாமல் உள்ளது. இந்த அரசு மீது குறைகள் ஏராளமாக இருக்கிறது.. சட்டம் ஒழுங்கு உட்பட குறைகள் இருக்கத்தான் செய்கிறது.. அதுக்காக இவங்க மற்றவர்கள் குற்றமற்றவர்கள் என்று சொல்ல வரவில்லை.. மாறி மாறி குற்றம் சாட்டி கொள்வதால் தீர்வு நமக்கு கிடைக்காது என்கிறேன்.. கோவை நகரத்தில் மீண்டும் தலைதூக்கிவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.. எந்த கட்சியாக இருந்தாலும் இதுபோன்ற விஷயங்களில் அரசியல் செய்வது தவறு.. உளவுத்துறையில் 60 சதவீதம் கிறிஸ்தவர்கள் உள்ளனர் என்று அண்ணாமலை சொல்கிறார்.

 அப்பட்டம்

அப்பட்டம்

இது அப்பட்டமான பொய்.. உண்மையிலேயே 6 சதவீதம்தான் இருக்கிறார்கள்.. யாரோ தவறாக டைப் செய்து தந்துவிட்டதால், அதையே அப்படியே ஒப்பிக்கிறார் அண்ணாமலை.. தைரியமிருந்தால், உளவுத்துறையில் 60 சதவீதம் உள்ள கிறிஸ்தவர்களின் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவாரா? வெளியிட சொல்லுங்கள் பார்க்கலாம்.. தீவிரவாதம் என்று வருகிறபோது, சாதி, மதம் கடந்து மனிதநேயத்தோடுதான் யாராக இருந்தாலும் அணுகுவார்கள்.. இப்படிப்பட்ட நேரத்தில் 60 சதவீதம் கிறிஸ்தவர்கள் என்று சொல்வது மிக மிக தவறு.. உங்களிடம்தான் உளவுத்துறை இருக்கிறதே.. நீங்களே மத்திய உளவுத்துறை வைத்து கிறிஸ்தவர்கள் எவ்வளவு என்று கணக்கெடுத்திருக்கலாமே?

 FIR + என்ஐஏ

FIR + என்ஐஏ

இதுபோன்ற கோவை நிகழ்வுகளில் மத்திய அரசாங்கத்துக்கு இதில் சம்பந்தமே இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது.. இந்த வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார் அண்ணாமலை.. எனக்கு இந்த அண்ணாமலை உண்மையிலேயே போலீஸ் அதிகாரிதானா என்பது சந்தேகமாக இருக்கிறது.. எப்ஐஆர்போட்டு விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. இதில் அரசியல் செய்யக்கூடாது.. அதிகாரிகள் மட்டத்தில், காவல்துறையாகட்டும், மத்தியில் புலன் விசாரணை அமைப்புகளாட்டும், யாராக இருந்தாலும், அவர்களுக்கு மக்கள் நலனும், மக்கள் பாதுகாப்பும்தான் முக்கியமாக பார்ப்பார்கள்.. அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு தர வேண்டுமே தவிர, குற்ற செயல்கள் பரவாமல் நாம்தான் உதவி செய்ய வேண்டும்..

ஸ்டேஷன்கள்

ஸ்டேஷன்கள்

இது மக்களுக்கு பீதியை உண்டாக்கும். மேலும், கொங்கு மண்டலத்துக்கு வெளியில் இருந்து யாரும் வரமாட்டாங்க.. என்ஐஏ-வுக்கு சென்னை தவிர, வேறெங்கும் ஸ்டேஷனே கிடையாது என்கிறார் அண்ணாமலை.. அப்படியானால், கொச்சியில் இருப்பது போலவே மதுரை, தென்மாவட்டங்கள், டெல்டா, கோவை பகுதிகளில் தேசிய பாதுகாப்பு கருதி, என்ஐஏ ஸ்டேஷனை நியமிக்க வேண்டியதுதானே.. யார் வேணாம்னு சொல்றாங்க.. எனக்கென்னவோ, அமித்ஷாவை காலி செய்துவிட்டு, அவரது உள்துறை பதவிக்கு அண்ணாமலை முயற்சிப்பதாகவே தெரிகிறது.. ஏன் என்றால் இவர் குற்றம் சொல்வது எல்லாமே அமித்ஷாவை குற்றம் சொல்வது போலவே இருக்கிறது.. மற்றபடி மாநில உரிமைகள் பற்றி பாஜகவுக்கு பேச தகுதியே கிடையாது." என்றார்.

English summary
60% Christianity: Both BJP + DMKs failures in the Kovai Bomb blast incident, says Senior leader KC Palanisamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X