60 தவெக எம்எல்ஏக்கள் அதிருப்தி.. விரைவில் ஆட்சி மாற்றம்.. குஷியில் திமுக.. ரகுபதி பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்தது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக அதிமுக முயற்சித்ததாக தவெக குற்றம் சாட்டியது. தவெக ஆட்சி நீடிக்காது. சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தவெக எம்எல்ஏக்கள் 60 பேர் அதிருப்தியில் உள்ளனர். அதனால் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என திமுகவின் ரகுபதி கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

புதுக்கோட்டையில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெகவில் ஆங்காங்கே அதிப்தியில் உள்ளனர். தவெகவில் 60-70 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியும் கைகொடுக்கவில்லை. தவெகவில் உள்ள மூத்த தலைவர்களே அவர்களை ஒருங்கிணைத்து அரசியல் செய்யவுள்ளனர். தவெக எம்எல்ஏக்கள் பாதிக்கு பாதியாக செயல்படவுள்ளனர். தவெகவுக்கு 109 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

60-tvk-mlas-unhappy-with-party-leadership-raghupathy-predicts-possible-political-turmoil-and-change

தவெக எம்எல்ஏக்கள் 60 பேர் அதிருப்தி

அதில் 60 பேர் வெளியே வந்தால் அவர்கள் தான் அதிக எண்ணிக்கை. அவர்கள் தனித்து செயல்பட சட்டப்படி உரிமை உள்ளது. நாங்கள் தான் தவெக என அவர்கள் சொல்லலாம். அந்த சூழல் உருவாகும்போது ஆட்சி மாற்றம் ஏற்படலாம். அங்கே வந்து ஒன்றிய ஆளுநர் தலையிட்டு ஆட்சியை சஸ்பெண்ட் செய்யலாம். பிறகு ஜனாதிபதி ஆட்சி நடக்கும். சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க யாருக்காவது வாய்ப்பு வழங்கலாம். அதில் யாரும் நிரூபிக்காவிடின் மீண்டும் தேர்தல் நடைபெறும்.

அந்த தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை எங்களுக்கும், மக்களுக்கும் உள்ளது. ஆட்சி மோசமாக உள்ளது. எல்லாத்துறைகளிலும் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். 1.38 கோடி மகளிருக்கு நாங்கள் மகளிர் உரிமைத் தொகை கொடுத்தோம். தவெகவினர் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிருக்கு நிறுத்திவிட்டனர். போக போக இன்னும் குறையும். மகளிர் உரிமை தொகை கொடுக்க கூடாது என்பதற்கான விதிகளை தளர்த்தி தளர்த்தி போவார்கள். அவர்களும் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். மகளிரின் அதிப்தியும் அதிகரிக்கும்.

குதிரை பேரம் நடத்தப்பட்டதா

காங்கிரஸ் வேண்டவே வேண்டாம் என நாங்கள் வந்துவிட்டோம். எங்களிடம் எதற்கு அவர்கள் பேச வேண்டும். மக்கள் எங்களை தாங்கி பிடிக்க தயாராக உள்ளனர். எங்கள் சுமையை இறக்கி வைத்துவிட்டோம். நாங்கள் நிம்மதியாக பணியாற்றுவோம். யாரின் தயவும் எங்களுக்கு வேண்டாம். தவெக எம்எல்ஏக்கள் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். வரம்பு மீறி செயல்படுகிறார்கள். நாங்கள் சொல்லும் ஆட்களுக்கு பணி கொடுக்க சொல்கிறார்கள்.

யார் சொல்வதை கேட்பது என அதிகாரிகள் மட்டத்திலேயே குழப்பம் நிலவுகிறது. எல்லாவற்றுக்கும் திமுக மீது குற்றம் சாட்டுவதை தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. சிறுமியை கூட கண்டு பிடிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆளுநரை அழைத்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. அதனால் தான் டெல்லியில் ரிப்போர்ட் கேட்டுள்ளனர். தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க திமுகவிடம் பணம் இல்லை. திமுக குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியமில்லை.

திமுக திட்டம் என்ன

மனமாற்றத்தை உருவாக்கும் சக்தி திமுகவுக்கு உள்ளது. தவெக எம்எல்ஏக்களே 60 பேரை நாமே நன்றாக ஆட்சியை கொண்டு செல்வோம் என முடிவுக்கு வந்துள்ளனர். அதை உறுதி செய்ய முடியவில்லை. அதிமுகவிலும் 30 பேர் அதிருப்தியில் உள்ளதாக சொல்கிறார்கள். இதனால் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை" என்று கூறினார். ரகுபதியின் கருத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+