Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹனிமூன்.. 60 வயது பாஜக தலைவருக்கு வாக்கிங்-கில் வந்த லவ்.. 51 வயசு மணப்பெண்ணை பிடுங்கி தின்ற வெட்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்னையின் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொண்டதாக கூறியிருக்கும் திலீப் கோஷ், நண்பர்கள் மற்றும் மக்கள் எல்லோருக்கும், அவர்களுடைய வாழ்த்துகளுக்காக நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்றும் நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.. செய்தியாளர்களிடம் பேசிய பாஜக கோஷ், தன்னுடைய ஹனிமூன் குறித்தும் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்காளத்தில் பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்தவர் திலீப் கோஷ்.. இவருக்கு தற்போது 60 வயதாகிறது.. ஆனால் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தார்.. திருமணத்தைப் பற்றி யோசிக்காமல், மேற்கு வங்கத்தில் பாஜகவை வளர்த்தெடுக்கவே, தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

BJP Honeymoon Dilip Ghosh

தற்போதுதான், கட்சியின் பெண் உறுப்பினரான ரின்கு மஜும்தார் என்ற 51 வயது நபரை தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். எளிமையாக நடந்த இந்த திருமணத்திற்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அதேபோல, முதல்வர் மம்தா பானர்ஜி பூங்கொத்து கொடுத்தனுப்பி திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

இரண்டாவது திருமணம்

இந்த திருமணம் குறித்து திலீப் கோஷ் சொல்லும்போது, என்னுடைய அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றவே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். எங்களுக்கு ஆசியும், வாழ்த்தும் வழங்கிய முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். நிறைய பேர் என்னுடைய கல்யாணத்துக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால், திருமணம் சிம்பிளாக எங்கள் வீட்டுக்குள்ளேயே நடந்து முடிந்துவிட்டது'' என்று கூறியிருக்கிறார்.

ரிங்கு மஜும்தாருக்கு இது இரண்டாவது திருமணமாகும். கணவரை பிரிந்து வாழ்ந்த வந்த ரிங்குவிற்கு ஒரு மகனும் இருக்கிறார்.. திலிப் கோஷ் தினமும் வாக்கிங் செல்லும் பழக்கமுடையவர்.. அப்படி கடந்த 2021ல் கார்டன் ஒன்றில், வாக்கிங் சென்றபோதுதான், முதல்முதலாக ரிங்குவை சந்தித்துள்ளார் திலீப் கோஷ்.. இதற்கு பிறகு இருவருக்குள்ளும் நட்பும், புரிதலும் உருவாகியிருக்கிறது..

ஐபிஎல் மேட்ச்

சமீபத்தில் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த ஐபில் கிரிக்கெட்டை இவர்கள் இருவருமே பார்த்துள்ளனர்.. அப்போதுதான், 2 பேரும் திருமணம் செய்து கொள்வது பற்றி முடிவு செய்தார்களாம்.

அதிலும், ரின்குதான் இந்த கேள்வியை முதலில் திலிப் கோஷிடம் கேட்டிருக்கிறார்.. ரின்கு ஏற்கனவே திருமணமானவர்.. முதல் கணவரின் மூலம் ஒரு மகனும் இருக்கிறார்.. இப்போது திலீப்பை நேசித்து மணம் முடிக்க விரும்பியிருக்கிறார். அப்போதுகூட, இந்த திருமணத்துக்கு திலிப் கோஷ் முதலில் சம்மதிக்கவில்லையாம்.. அதன்பிறகுதான் சம்மதித்துள்ளார்.

தேன்நிலவு திட்டங்கள் பற்றி செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த கோஷ், நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் அது நடக்கும் என்று சிரித்தபடியே சொன்னார்.

பிரத்யேகமான பேட்டி

நியூஸ் 18 சேனலுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ள ரின்கு, தன்னுடைய காதல் கதையை விரிவாகவே சொல்லி உள்ளார்.. கடந்த 2013 ம் ஆண்டிலிருந்தே மேற்கு வங்க பாஜகவில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். திலீப் கோஷ் பாஜகவின் முக்கிய தலைவராக வளர்ந்தாலும், எம்.பி, எம்எல்ஏவாக இருந்தபோதும், ஒரு முக்கிய பாஜக தலைவராக மட்டுமே கோஷை அறிந்திருந்தார்.

2021 தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்க பாஜக நடத்திய தொண்டர்கள் கூட்டத்தில், சந்தித்து கொண்டாலும், வெறும் சம்பிரதாயமாக மட்டுமே இருவரும் பேசிக்கொண்டார்களாம்..

ஆனால், கடந்த 2024 எம்பி தேர்தலின்போதுதான் ஓரளவு பேசினாராம்.. அதுவும் முழுக்க முழுக்க அரசியல் பேச்சையே பேசினாராம்.. திலீப் கோஷ் சமீபத்தில் தேர்தல் தோல்வியை சந்தித்ததுமே, அவரது மாநில தலைவர் பதவியும் முடிவுக்கு வந்தது. இந்த காலகட்டத்தில்தான், அவருடன் அதிக நேரம் செலவிட ரின்குவுக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.. அப்போதுதான் நிறைய விஷயங்களை மனம் விட்டு பேச முடிந்தது" என்கிறார் ரின்கு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+