இரவோடு இரவாக.. சென்னையில் மழைநீர் தேங்கிய 65 இடங்களில் மோட்டார் பம்ப்செட் வைத்து வெளியேற்றம்.. சபாஷ்
சென்னையில் 65 இடங்களில் மோட்டார் பம்ப்செட் மூலம் மழைநீர் வெளியேற்றம் செய்யப்பட்டது
சென்னை: சென்னையில் 65 இடங்களில் மோட்டார் பம்ப்செட்-களை வைத்து தேங்கிய மழைநீர் வெளியேற்றம் செய்யப்பட்டது.. அதிலும், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீர் இரவு பகலாக நடந்த தீவிர பணியின் மூலம் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த முறை வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி இருந்தாலும், பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் அதிகமான மழைபொழிவு காணப்படுகிறது.
வழக்கமாக சென்னையில் மழை என்றாலே, அக்டோபர் இறுதி முதல் டிசம்பர் வரைக்கும் பல்வேறு இடங்கள் வெள்ளநீரில் மூழ்கிவிடும்..

இடங்கள்
அந்தவகையில், எழும்பூர், வேப்பேரி, திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தி.நகர், மாம்பலம், ஜிஎன் செட்டி சாலை, கொளத்தூர் என பல்வேறு இடங்களில் கனமழை நீடித்தாலும், பெரிய அளவு பாதிப்பில்லை.. பெரும்பாலான இடங்களில் மழைநீரும் தேங்கவில்லை.. மழை அதிகமாக பெய்தாலும்கூட, அவை உடனடியாக வடிந்துவிட்டது.. பல இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டன..

கன்ட்ரோல் ரூம்
இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர்கள், நேருவும், சேகர்பாபும் செய்தியாளர்களிடம் நேற்று பேசினார்கள்.. அப்போது 'ரிப்பன் மாளிகையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு ரூமில் பொதுமக்கள் எந்நேரமும் தொடர்புக் கொண்டு பாதிப்புகள் குறித்த புகார்களையும் உதவிகளை கோரலாம் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.. மழைநீர் வடிகால் இல்லாத சில பகுதிகளில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளதால், அங்கெல்லாம், மோட்டார் கொண்டு மழைநீர் வெளியேற்றப்படுகிறது. ஏன்றும், முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான், இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு காண பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் தான் பல பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை என்றும்
கூறினார்கள்..

536 பம்ப்செட்
அதன்படி, மழைநீர் தேங்கக் கூடிய பகுதிகளில் மோட்டார் பம்ப்செட் வைத்து தண்ணீரை வெளியேற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.. குறிப்பாக, 536 மோட்டார்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தது.. கடந்த முறை மழைநீர் தேங்கிய 156 இடங்களுக்கு பம்ப் செட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.. அதற்கு காரணம், கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகள் அதிகம் என்பதால், அத்தனை பம்ப் செட்கள் தேவைப்பட்டன.. ஆனால், இந்த முறை மழைநீர் தேங்காததால் அவைகளை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. 65 இடங்களில் மட்டுமே மழைநீர் அதிகளவு தேங்கியதை அதிகாரிகள் கண்காணித்தனர்...

துண்டு துண்டாக
அந்த பகுதியில் மட்டுமே மோட்டார்கள் மூலம் மழைநீரும் வெளியேற்றப்பட்டன. அதிலும் மழை பெய்த அன்றைய தினமே இரவோடு இரவாக, 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றிவிட்டனர்.. இன்னும் 15 இடங்களில் மட்டுமே மழைநீரை அகற்றும் பணி நடந்து கொண்டிருக்கிறது.. அதேபோல, சென்னையில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை 19 மரங்கள் பல்வேறு பகுதிகளில் விழுந்தன... இதுகுறித்து மாநகராட்சிக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததுமே, ஊழியர்கள் விரைந்து வந்து, மரத்தை துண்டு துண்டாக அறுத்து போக்குவரத்தை சீராக்கினார்கள்.. கொட்டும் மழையிலும் இந்த பணி நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications