₹666 கோடியாச்சே.. மோடி இப்படி போனதுமே எடப்பாடிக்கு வந்த போன்.. அப்ப கூட அசரல போல.. புது பிளான் வேற
எடப்பாடி பழனிசாமி விரைவில் ஓபிஎஸ்ஸை இணைத்து கொள்வார் என்கிறார்கள்
சென்னை: மெகா கூட்டணியுடன் அதிமுக தேர்தலை சந்திக்கும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்ட நிலையில், புது வியூகம் ஒன்றை தற்போது கையில் எடுத்துள்ளாராம்.
திண்டுக்கல் விழாவை முடித்துவிட்டு மதுரையிலிருந்து கிளம்பும் முன்பு, எடப்பாடி பழனிசாமி + ஓபிஎஸ் இருவரையும் "ஒற்றுமையாக இருங்கள், அதுவே நான் எதிர்பார்ப்பது" என்பதை வலியுறுத்தும் வகையில் இருவரின் கைகளையும் மோடி இணைத்து வைத்தார் இல்லையா?
இதற்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் இருந்ததாக சொல்கிறார்கள்.. அதாவது, ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி.. தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ்.. ஒரு கட்டத்தில் அதிமுகவில் ஓபிஎஸ்சை இணைய வைத்தார் மோடி. அவருக்கு துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சர் பதவி தரப்பட்டது.

நெளிந்த எடப்பாடி
நிதியமைச்சர் பதவியேற்பு விழாவில், எடப்பாடி- ஓபிஎஸ் இருவரையும் மத்திய அரசு சேர்த்து வைத்துள்ளது என்பதை பறைசாற்றும் வகையில் 2 பேரின் கைகளையும் இணத்து உயரத் தூக்கிப்பிடித்தார் அப்போதைய பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்... அன்றைய நிகழ்வை நினைவு கூறும் வகையில்தான், இந்த சம்பவம் நடந்துள்ளதாக சொல்கிறார்கள்.. ஏர்போர்ட்டில், "உங்களை டெல்லியில் சந்திக்க விரும்புகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி சொல்ல, இருவரும் சகோதர உணர்வுடன் வருவதாக இருந்தால், அடுத்த வாரமே சந்திக்கலாம் என்று சொன்னாராம் பிரதமர் மோடி.

ஃபோன்ல யாரு
அதற்கு எடப்பாடி பழனிசாமி எதையுமே சொல்லவில்லை என தெரிகிறது.. ஓபிஎஸ்சை இணைப்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பது எடப்பாடிக்கு அப்-செட்தானாம்.. மோடி கிளம்பியதற்கு பிறகு 2 மணி நேரம் கழித்து, எடப்பாடிக்கு அந்த நபரிடமிருந்து ஃபோன் வந்திருக்கிறது. அந்த நபர் எடப்பாடிக்கு நெருக்கமான தொழிலதிபரான திரிவேணி எர்த் மூவர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என்கிறார்கள். "ஓபிஎஸ் விஷயத்தில், உங்கள் பிடிவாதத்தை டெல்லி ரசிக்கவில்லை. உங்கள் பிடிவாதம் உங்களுக்கும் நல்லதல்ல, அதிமுக - பாஜக கூட்டணி அரசியலுக்கும் நல்லதல்ல என நினைக்கிறார்கள். அதனால், பிடிவாதத்தை தளர்த்துங்கள் என்று அந்த தொழிலதிபர் சொல்லியுள்ளதாக தெரிகிறது.

மூட் அவுட்
இதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு மூட் அவுட் ஆகியிருக்கிறது.. இருந்தபோதிலும், அந்த சூழலில், அப்படி ஒரு போன் வந்ததும், அவரது பிடிவாதம் தளரும் ஓபிஎஸ்-இபிஎஸ் நட்பாவார்கள், பிடிவாதத்தை அவர் விடவில்லையெனில், நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி தனிமைப்படுத்தப்படுவார், பாஜகவுடன் ஓபிஎஸ், தினகரன் இருவரும் தனித்தனியாக கூட்டணி அமைப்பார்கள். எடப்பாடி தனிமைப்படுத்தப்படுவதுடன் அவரது இமேஜை டேமேஜாக்கும் வகையில் அவருக்கு எதிரான வழக்கினை வைத்து நெருக்கடி தரப்படும் என்று அதிமுக நலம்விரும்பிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

விஐபி
நடந்து வரும் சம்பவங்களையடுத்து, எடப்பாடி பழனிசாமி ஏகத்துக்கும் டென்ஷனுக்கும், நெருக்கடிக்கும் ஆளாகி உள்ளதாகவும் தெரிகிறது. இதனிடையே, ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியும் தன்னுடைய சமூகத்தை சேர்ந்தவருமான அந்த விஐபியிடம் ஆலோசித்து வருகிறாராம் எடப்பாடி.. இதனிடையே இன்னொரு தகவலும் கிளம்பி உள்ளது.. அதிமுகவில் இப்போது இருக்கும் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் என தனித்தனியாக கோஷ்டியாக பிரிந்துள்ள நிலையில், அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்க போறாராம் எடப்பாடி பழனிசாமி..

வேற லெவல்
இதுவரை இப்படியான முயற்சியை ஓபிஎஸ் தரப்பு மட்டுமே எடுத்து வந்த நிலையில், எடப்பாடி இந்த வியூகத்தை எடுத்துள்ளார்.. எதிர்கூடாரத்தில் உள்ளவர்களிடம் பேசி சமாதானப்படுத்தி தங்கள் கூடாரத்திற்கு அழைத்து வரும்பட்சத்தில் கட்சியில் தனக்கான இடமும் பூர்த்தியாகும் என்று நினைக்கிறாராம்.. இந்த லிஸ்ட்டில் அமமுக நிர்வாகிகளும் அடக்கம் என்கிறார்கள்.. அதாவது, அமமுகவிலேயே பாஜகவை ஏற்காத கோஷ்டி உள்ள நிலையில், உள்ளதாம்..அந்த நிர்வாகிகள் தங்கள் பக்கம் இணைந்ததுமே, மெகா கூட்டணிக்கான பிளானை அப்போதுதான் கையில் எடுக்க போகிறாராம்..

சிலுவம்பாளையம்
இந்த நிர்வாகிகளை தன்பக்கம் கொண்டுவருவதால், ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச ஆதரவும் இல்லாமல் போவதுடன், பிரச்சார நேரத்தில், ஓபிஎஸ் டீமுக்கு போய், தன் தரப்புக்கே வந்துவிட்டவர் என்று பிரச்சாரம் செய்யவும் இந்த டீல் ஓகே ஆகும் என்று கணக்கு போடுகிறாராம்.. அதனால், ஓபிஎஸ் யாருக்கெல்லாம் மாவட்டங்களில் பொறுப்பு கொடுத்துள்ளாரோ, அதே பொறுப்பு அல்லது அதற்கும் உயர்வான பதவியை தருவதாக சொல்லி, தூது முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஓபிஎஸ் ஆதரவாளர்களோ, ஓபிஎஸ்ஸை நிச்சயம் எடப்பாடி ஏற்றுக்கொள்வார் என்கிறார்கள்.

666 கோடி ரூபா
கட்சிக்காக இல்லாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் தன்னை காப்பாற்றிக்கொள்ளவாவது, பாஜக பேச்சுக்கு கட்டுப்படுவார்.. அதிலும் 660 கோடி ரூபாய் விவகாரம், நெடுஞ்சாலை துறை விவகாரம், போன்றவைகள் விஸ்வரூபமெடுத்துவிடும் என்ற சூழலில், மேலிட முடிவை ஏற்று நடப்பார்.. மற்றபடி, தனித்து சென்றால், எதற்குமே லாபம் இல்லாமல் போய்விடும் என்பதை எடப்பாடி உணராமல் இல்லை.. அவரே உணர்ந்தாலும், அவருடன் இருக்கும் ஆதரவாளர்கள், இரட்டை இலை இல்லாமல், அதிமுகவில் பயணிக்க விரும்பமாட்டார்கள்.. இலைதான் பலம்" என்கிறார்கள்.. ஆக, எடப்பாடி தன்னை ஏற்றுக்கொள்வார் என்று ஓபிஎஸ் ஒருபக்கமும், டிடிவி மறுபக்கமும் வழிமேல் விழிவைத்து காத்திருக்கும்போது, யூடர்ன் போட்டு வேற பக்கம் தன் வழியில் போய் கொண்டே இருக்கிறார் சிலுவம்பாளையம் பழனிசாமி...!!!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications