ஆடுகளம் டூ அசுரன் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற தனுஷ்
சென்னை: அசுரன் படத்தில் நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அசுரன் படத்தில் தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். அவரது உழைப்புக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ஆடுகளம் திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற தனுஷ் மீண்டும் அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றுள்ளார்.
மத்திய அரசின் 67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன்.
எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலின் கருவை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் அசுரன் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்திருந்தனர். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார்.

அசுரன் சிறந்த படம்
தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெயர் அசுரனுக்கு கிடைத்தது. இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரித்திருந்தார். இந்தப்படத்தில் கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளது.

தனுஷ் பெற்ற தேசிய விருது
அசுரன் படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு 58வது தேசிய விருதுகள் அறிவித்த போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றிருந்தார். 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதினைப்பெற்றுள்ளார் நடிகர் தனுஷ்.

தயாரிப்பாளர் மகிழ்ச்சி
இந்த படத்திற்கு விருது கிடைத்தது பற்றி பேசிய தயாரிப்பாளர் தாணு தான் அடைந்துள்ள மகிழ்ச்சிக்கு அளவில்லை சர்க்கரை பந்தலில் தேன் மழை பொழிந்தது போல உள்ளது என்று கூறினார். வண்ண வண்ண பூக்கள் படத்திற்காக பாலுமகேந்திரா சிறந்த விருதினை பெற்றுக்கொடுத்தார். இப்போது வெற்றிமாறன் பெற்றுக்கொடுத்துள்ளார் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வயதான தனுஷ்
அசுரன் படத்தில் தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். அசுரன் படத்தில் சிவசாமியாகவே வாழ்ந்திருப்பார் தனுஷ். அவரது உழைப்புக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications