குற்றவாளிகள் கண்காணிப்பு.. ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.. சென்னை போலீஸ் கமிஷனர் பளீச்!
சென்னை: சென்னையில் 7,800 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
சென்னையில் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போர் நினைவுச் சின்னம் அருகில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மக்கள் கூட்டம்
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- தீபாவளியை பண்டிகை நெருங்கி வருவதால் முக்கியமான கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனை கண்காணித்து குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறோம்.

கண்காணிப்பு பணிகள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சென்னை மாநகர் முழுவதும் கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மற்றும் டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம். இதுதவிர ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குற்றச்செயல்கள் தடுக்கப்படும்
இதன் மூலம் குற்றச்செயல்கள் தடுக்கப்படும். குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் உடனுக்குடன் பிடி படுவார்கள். குற்றவாளிகளை அடையாளம் காணும் 'பேஸ் டிடெக்ஷன் சாப்ட்வேர்' மூலம் சென்னையில் 7,800 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளையும் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்கள் இதற்கு மேலும் அத்துமீறினால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்
கொரோனா பரவலை தடுக்க அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சென்னை உள்ள பெரிய கடைகளில் மாஸ்க் அணிந்த மக்களை மட்டுமே அனுமதிக்கும்படி கூறியுள்ளோம். இதனை மீறும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications