7 தொகுதிகள், 114 எம்எல்ஏக்கள், 3 ஃபைல்கள்.. ஆட்சியை கவிழ விடாமல் தவெக போடும் மாஸ்டர் பிளான் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு ஆட்சிக்கு மெஜாரிட்டி என்பது வெறும் சட்டசபை எண்ணிக்கை மட்டுமே கிடையாது.. அந்த எண்ணிக்கையை வைத்துக்கொண்டு எவ்வளவு சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடிகிறது என்பதுதான் மிக முக்கியம். அந்த வகையில் பார்த்தால், தவெக அரசு இப்போது எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய அரசியல் சோதனை, நடைபெற உள்ள இடைத்தேர்தலாகவே இருக்கிறது. ஏன் தெரியுமா??

இப்போதுள்ள நிலையில் தவெகவிடம் 107 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.. தமிழக சட்டசபையில் தனிப்பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், காலியாக உள்ள 7 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால் அதன் பலம் 114 ஆக உயரும்.

TVK

மெஜாரிட்டிக்கு இன்னும் 4 உறுப்பினர்கள் தேவைப்பட்டாலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவு தொடரும் பட்சத்தில் ஆட்சியை நகர்த்துவதற்கான நிலை மேலும் சாதகமாகும்.... இதுதான் தவெகவின் முதல் கணக்கு.. ஆனால், அரசியல் கணக்கு இத்துடன் முடிந்துவிடவில்லை.

7 தொகுதிகள் ஏன் முக்கியம்?

இடைத்தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறுவது வழக்கமான விஷயம்தான்.. ஆனால், ஆட்சியில் இருக்கும் கட்சி தொடர்ச்சியாக பல தொகுதிகளை கைப்பற்றும்போது அதன் அரசியல் தாக்கம் வேறு மாதிரியாக இருக்கும்.

அதுவும் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் தவெகவை பொறுத்தவரை, இந்த வெற்றி ஒரு இடைத்தேர்தல் வெற்றியாக மட்டும் பார்க்கப்படாது. ஆட்சிக்கு மக்கள் மத்தியிலுள்ள ஆதரவை அளவிடும் ஒரு அரசியல் குறியீடாகவே பார்க்கப்படும்.

7 தொகுதிகளிலும் வெற்றி கிடைத்தால், சட்டசபை எண்ணிக்கை உயரும். அதைவிட முக்கியமாக, கூட்டணி கட்சிகளிடம் தவெகவின் அரசியல் பேரம் வலுப்பெறும்.

ஏனென்றால், கூட்டணி ஆட்சியில் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி எதிர்பார்ப்புகள் இருக்கும். தங்கள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் வேண்டும், தங்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் அரசால் மதிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும். ஆளுங்கட்சியின் எண்ணிக்கை வலுவாக இருக்கும் வரை இந்த அழுத்தங்களை சமாளிப்பது ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும். இதனால்தான் தவெகவுக்கு இந்த 7 தொகுதிகளும் வெறும் 7 தொகுதிகள் மட்டுமே கிடையாது.

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்

மேலும், 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் 114 என்ற எண்ணிக்கை வந்துவிடும் என்பதால், பெரும்பான்மைக்கு இன்னும் 4 இடங்கள் குறைவாக இருந்தாலும், ஆட்சிக்கு உடனடி ஆபத்து ஏற்படும் நிலை இருக்காது என்பதே தவெகவின் அரசியல் கணக்காக இருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் மற்றும் அ.ம.மு.க.வில் இருந்து தவெகவுக்கு வந்த ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவு உள்ளிட்ட கணக்குகளையும் சேர்த்துப் பார்த்தால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தொடர்ந்து நடத்துவதற்கான வாய்ப்பு தவெகவுக்கு இருக்கிறது.

அதனால், இந்த இடைத்தேர்தலில் வெற்றி என்பது ஆட்சியை காப்பாற்றுவதற்கான கட்டாயம் என்பதைக் காட்டிலும், கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தை சமாளித்து, அரசியல் ரீதியாக தனது கையை ஓங்கச் செய்வதற்கான மிக முக்கியமான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

கூட்டணி கட்சிகளின் அழுத்தம்

தவெக அரசுக்கு இப்போது இன்னொரு சேலஞ்சும் உள்ளது.. கூட்டணி கட்சிகளின் ஆதரவு என்பது ஆட்சியை அமைப்பதற்கு உதவியாக இருந்தாலும், அதே ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்றால் அரசியல் ரீதியாக அவர்களையும் திருப்திப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

கூட்டணி கட்சிகள் அடிக்கடி அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புவதும், தங்களுடைய கோரிக்கைகளை வெளிப்படையாக முன்வைப்பதும் இந்த அரசியல் சூழலின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

இதனால் சட்டசபையில் தனது சொந்த பலத்தை முடிந்தவரை அதிகரிக்க வேண்டும் என்பதே தவெகவின் நீண்டகால அரசியல் தேவையாக மாறுகிறது... அதற்கான முதல் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்.

அடுத்த அஸ்திரம் அந்த 3 ஃபைல்களா?

ஏற்கனவே, முதலமைச்சரின் மேஜையில் இருப்பதாக கூறப்படும் 3 முக்கிய ஃபைல்கள், எப்போது திறக்கப்படும்?" என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. ஆனால், தவெக தரப்பில் இதை வெறும் நிர்வாக விவகாரமாக மட்டும் பார்க்கவில்லையாம்.

தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கும் நேரம், அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமான காலகட்டமாக மாறலாம் என்பதே இங்குள்ள கணக்கு.

தேர்தல் தேதி அறிவிப்பு... அதன்பிறகு அரசியல் களம் சூடுபிடிப்பது... அதே நேரத்தில் அந்த 3 ஃபைல்கள் தொடர்பான விவரங்கள் வெளியில் வருவது என ஒரு வரிசையாக அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

அப்படி ஏதாவது முக்கியமான தகவல்கள் ஃபைல்களில் இருந்தால், அதை தேர்தல் நேரத்தில் வெளிப்படுத்தி, அதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் இறங்கலாம் என்றும் தவெக கணக்கு போடுகிறதாம்..

4 மாஸ்டர் பிளான்

சுருக்கமாக சொல்லப்போனால், சட்டசபையில் எண்ணிக்கையை உயர்த்துவது. கூட்டணி கட்சிகளின் மீது இருக்கும் சார்பை குறைப்பது. ஆட்சிக்கு மக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிப்பது. எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது... இந்த 4 அஸ்திரத்தையும் ஒரே நேரத்தில் சாதிக்கக்கூடிய தேர்தலாகவே இடைத்தேர்தலை தவெக பார்க்கக்கூடும்.

7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் 107 என்ற எண்ணிக்கை 114 ஆகிறது. பெரும்பான்மைக்கு இன்னும் 4 இடங்கள் குறைவாக இருந்தாலும், அரசியல் ரீதியாக அந்த 7 வெற்றிகள் தரப்போகும் நம்பிக்கை மிகப்பெரியது.

ஒருவேளை எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையானால், அதுவே எதிர்க்கட்சிகளுக்கு புதிய அரசியல் ஆயுதமாக மாறிவிடும்.. கூட்டணி கட்சிகளின் அழுத்தமும் அதிகரிக்கலாம்.. "ஆட்சிக்கு மக்கள் ஆதரவு குறைந்து வருகிறது" என்ற பிரச்சாரமும் உருவாகலாம் அதனால்தான் இப்போதைய சூழலில் இடைத்தேர்தல் என்பது தவெகவுக்கு ஒரு சாதாரண தேர்தல் அல்ல.

இந்த இடைத்தேர்தல் யார் எத்தனை தொகுதிகளை வென்றார்கள் என்ற கேள்வியை தாண்டி, விஜய் தலைமையிலான தவெக ஆட்சி எவ்வளவு அரசியல் வலிமையுடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது? என்பதற்கான பதிலையும் கொடுக்கக்கூடும் தேர்தலாகும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+