7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. சீமா அகர்வால் உள்பட லிஸ்ட்டில் சீனியர்கள்.. யார் யார் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்தும், ஒருவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியும் தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த பட்டியலில் சீமா அகர்வால், ருபேஷ் குமார் மீனா, விஜயயேந்திர பிதரி, உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் யார் யார்? அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் என்னென்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஒரே இடத்தில் நீண்டகாலமாக பணியாற்றுதல், நிர்வாக காரணங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த பணி இடமாறுதல் என்பது தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தான் நேற்று 8 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
* சென்னையில் குடிமைப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கல் பிரிவின் டிஜிபியாக பொறுப்பு வகித்து வந்த சீமா அகர்வால், தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவி்ன டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னையில் குடிமைப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கல் பிரிவின் ஐஜியாக செயல்பட்டு வந்த ரூபேஷ் குமார் மீனாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் குடிமைப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கல் பிரிவின் டிஜிபி பணிகளையும் சேர்த்து கவனிக்க உள்ளார்.
* சென்னை காவல்துறை தலைமையக ஐஜி விஜயேந்திர பிதரி, சென்னை காவல்துறை தலைமையகத்தின் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னை காவல்துறை தலைமையகத்தின் கூடுதல் ஆணையராக செயல்பட்டு வந்த கபில் குமார் ஷரத்கர், சென்னை அமலாக்கப் பிரிவு ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை அமலாக்கப் பிரிவு ஐஜி ஜி.கார்த்திகேயன், சென்னை போக்குவரத்துத் துறை ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* ஐஜி அந்தஸ்தில் லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை இணை ஆணையராக செயல்பட்டு வந்த சந்தோஷ் குமார், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை பொருளாதார குற்றப் பிரிவு ஐஜி சத்யப்ரியா காவலர் நலப்பிரிவு ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னையில் காவலர் நலப்பிரிவு டிஐஜியாக எம்.துரை, சென்னை காவல் துறை தலைமையக டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications