அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு.. கிடைத்தது என்ன? அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வ தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகமாணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது குறித்தும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்தியது. செந்தில் பாலாஜி விவகாரத்தின் அனல் தணிவதற்குள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை மேற்கொண்டது.

7 locations owned by Ponmudi raided: Enforcement Directorate

செம்மண் குவாரி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நேற்று காலை 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். பொன்முடி மற்றும் அவரது மூத்த மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்.பியுமான கௌதம் சிகாமணி, அவரது இளைய மகனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவருமான மருத்துவர் அசோக் சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மற்றும் சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சரின் வீடு, கௌதம் சிகாமணி அலுவலகம், பொன்முடிக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், அசோக் சிகாமணிக்கு சொந்தமான மருத்துவமனை உட்பட அவருக்கு தொடர்புடைய 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்றது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். பொன்முடி முன்னிலையில், ஒவ்வொரு அறையையும் அலசி ஆராய்ந்து தீவிர சோதனை நடத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. 13 மணி நேர விசாரணைக்கு பிறகு அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு பொன்முடி அழைத்து செல்லப்பட்டார்.

அவரது காரிலேயே அழைத்து செல்லப்பட்டார். பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. விசாரணை 3.30 மணி அளவில் முடிந்தது. அப்போது அவரிடம் நீங்கள் மீண்டும் விசாரணைக்கு இன்று மாலை 4 மணி அளவில் ஆஜராக வேண்டும் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் வழங்கினர். இதன்படி, இன்று மாலை பொன்முடி ஆஜர் ஆனார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், பொன்முடிக்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:- "பொன்முடிக்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தினோம். சோதனையின் போது ரூ. 81.7 லட்சம், ரூ.13 லட்சம் மதிப்பு வெளிநாட்டு பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொன்முடிக்கு சொந்தமான ரூ. 42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+