இந்த 7 விஷயம் தான் பெஸ்ட்.. தமிழ்நாட்டை திரும்பி பார்த்த உலக நாடுகள்.. இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே!
சென்னை: தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 ல் தமிழ்நாடு தொடர்பான 7 அறிவிப்புகள் பெரிய அளவில் கவனம் பெற்றன.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும்.

இன்று பல முக்கிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. அதில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைக்க ₹6,180 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
தூத்துக்குடி, திருநெல்வேலியில் JSW நிறுவனம் ₹12,000 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்ப்பட்டு உள்ளது.
ஓசூரில் உள்ள ஐபோன் உதிரி பாக ஆலையில் விரிவாக்கம் செய்ய டாடா நிறுவனம் ரூ.12,800 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. . கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ₹12,082 கோடி மதிப்பில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ உள்ளது
தூத்துக்குடியில் ₹16,000 கோடி முதலீட்டில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க, வியட்நாமைச் சேர்ந்த VinFast நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 3,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு. இந்த ஆண்டிலேயே உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன
அமெரிக்காவின் First Solar நிறுவனம் - ₹5600 கோடி முதலீடு செய்ய உள்ளது. சென்னையில் பெகட்ரான் - ₹1000 கோடி முதலீடு (8000 பேருக்கு வேலைவாய்ப்பு) செய்ய உள்ளது. சென்னையில் மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் - ₹200 கோடி முதலீடு செய்ய உள்ளது.
தமிழ்நாட்டில் டிவிஎஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.5,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6,000 கோடி முதலீடு செய்ய உள்ளது;.
முக்கிய நிறுவனம்: சென்னையில் நடக்கும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது.
இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர்கள் LGBTQ & Differently Abled ஆக இருக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project (Global FMCG) நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது.
முக்கிய அறிவிப்பு: தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 ல் தமிழ்நாடு தொடர்பான பின்வரும் 7 அறிவிப்புகள் பெரிய அளவில் கவனம் பெற்றன.
1 தமிழ்நாடு ஒவ்வொரு 20 வினாடிக்கும் ஒரு காரையும், ஒவ்வொரு 90 வினாடிக்கும் ஒரு வணிக வாகனத்தையும் உற்பத்தி செய்து, 170 நாடுகளுக்கு ஆட்டோமொபைல்களை ஏற்றுமதி செய்கிறது.
2 இந்தியாவில் விற்கப்படும் 10 எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் 7 இப்போது தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன
3 இந்தியாவின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாட்டில் செய்யப்படுகிறது.
4 இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் 45% தமிழ்நாட்டில் செய்யப்படுகிறது.
5 இந்தியாவின் இயந்திர சாதன உற்பத்தியில் 18% தமிழ்நாட்டில் செய்யப்படுகிறது.
6 இந்தியாவின் மோட்டார் மற்றும் பம்ப் உற்பத்தியில் 40% கோயம்புத்தூரில் மட்டுமே உள்ளது.
7 இல்லை. டயர் உற்பத்தி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் 1
8 5000+ காப்புரிமைகள் 2023 இல் தாக்கல் செய்யப்பட்டன (இந்தியாவில் அதிகம்)
9 இந்தியாவின் பெண் தொழிலாளர்களில் 43% தமிழ்நாட்டில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications