மனசு கேட்காமல் மணிப்பூருக்கு செல்லும் முஸ்லிம் லீக் டீம்! லிஸ்டில் நம்ம ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிப்பூரில் தற்போது உள்ள நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியிலிருந்து 7 பேர் கொண்ட குழு அங்கு செல்லவுள்ளது. அந்தக் குழுவில் கேரள எம்.பி.க்கள் 3 பேருடன் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனியும் பயணிக்கவுள்ளார்.

மணிப்பூர் ஆய்வுப் பயணம் பற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

7 member team from the Indian Union Muslim League will visit Manipur to personally inspect the current situation.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வரும் நிலையில், அங்குள்ள மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும் சமூக நல்லிணத்துடன் வாழ வேண்டும். அந்த மாநிலம் மீண்டும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி விரும்புகிறது.

இந்நிலையில், கலவரம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் தற்போது உள்ள நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கள ஆய்வு குழு வரும் 10ஆம் தேதி மணிப்பூருக்கு செல்கிறது.

7 member team from the Indian Union Muslim League will visit Manipur to personally inspect the current situation.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் சையத் சாதிக் அலி தங்ஙள் தலைமையிலான குழு மணிப்பூருக்கு செல்கிறது. இந்த குழுவில்,தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி., தேசிய பொருளாளர் பி.வி.அப்துல் வஹாப் எம்.பி., தேசிய துணைத் தலைவர் முனைவர் அப்துல் சமத் சமதானி எம்.பி., நாடாளுமன்ற கொறடா கே.நவாஸ் கனி எம்.பி. உள்ளிட்ட நான்கு எம்.பிக்கள் மற்றும் கட்சியின் தேசிய செயலாளர் குர்ஹம் அனீஸ் உமர் ஆகியோரும் மணிப்பூர் செல்கிறார்கள்.

இந்த குழு, மணிப்பூரில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதுடன், நிவாரண முகாம்களுக்கும் செல்ல உள்ளது. அத்துடன் மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கியை முஸ்லிம் லீக் குழு சந்திக்க உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+