சென்னை மக்களே கவனம்.. பள்ளிக்கரணை, அடையாறு, ஐடி கார்டர் உள்பட 7 பகுதியில் இன்று மின்தடை! முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மின்வாரியம் சார்பில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பள்ளிக்கரணை, அடையாறு, ஐடி காரிடார் உள்பட 7 பகுதிகளில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

சென்னையில் தினமும் ஒவ்வொரு இடங்களில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மின்வாரியத்தின் பராமரிப்பு பணியின் காரணமாக மின்தடை ஏற்படும் இடங்களில் விபரம் வருமாறு:

chennai eb power cut

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 03.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை காலடிப்பேட்டை, பள்ளிக்கரணை, முகலிவாக்கம், ராமாபுரம், அடையாறு, மடிப்பாக்கம், ஐ. டி. காரிடர் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

காலடிப்பேட்டை: டிஎச் ரோடு, ராஜா கடை, திருச்சினாங்குப்பம், கன்னி கோவில், அப்பர்சாமி கோவில் தெரு, கணக்கர் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, மார்க்கெட் சந்து, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, சாத்தாங்காடு பகுதி, பது தெரு, வசந்தா நகர், ஜான்ரவார் தெரு, ஐயப்பள்ளி தெரு, சேஷாச்சல கிராமணி தெருவின் ஒரு பகுதி, திலகர் நகர், சின்னமேட்டுபாளையம், பெரியபாளையம், மேற்குமாட வீதி, வடக்குமாட வீதி, பிகேஎன் காலனி, வீரராகவன் தெரு, குமரன் நகர், கோமாதா நகர், பிபிடி ரோடு மற்றும்அதனை சுற்றிய இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை, ஏரிக்கரை தெரு, பவனாி அம்மன் நகர், பூர்வாங்கரா பிளாட்ஸ், விஎம் ரோடு, பாடசாலை, நேரு தெரு, ஆயில் மில், கிணற்று சாலை, மேடவாக்கம், கிருஷ்ணா நகர், ராதா நகர், கோகுல் நகர், சவும்யா நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, பாபு நகர் முதல் தெரு, வைஷ்ணவி நகர், நீலா நகர், சிவகாமி நகர், பட்டேல் சாலை, பிரபு ராஜா நகர் முதல் தெரு, வைஷ்ணவி நகர், நீலா நகர், சிவகாமி நகர், பட்டேல் சாலை, பிரபு ராஜா நகர், விமலா நகர், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், அருணோதயா நகர், ஏழுமலை சாலைகளில் மின்தடை ஏற்பட உள்ளது.

மேலும் பெருமாள் நகர், குரோம்பேட்டை சாலை, ஜெய் கணேஷ் நகர், அருள் முருகன் நந்தவனம், இந்திரபுரி, அம்பேத்கார் சாலை, பலராமன் தெரு, சித்தார்த் அவென்யு, நந்தம்பாக்கம், கொளப்பாக்கம் நாராயணன் நகர், ராமசந்திரா நகர், பட்டம்மாள் கார்டன், கொளப்பாக்கம் காலனி, ராமமூர்த்தி அவென்யு, விஜிஎன் உருவில்லா, தேவி கருமாரியம்மன் நகர் மேக்வொர்த் நகர், ஒத்தவாடை தெரு, எம்ஜிஆர் நகர், மகாலட்சுமி நகர், தெரசா நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

முகலிவாக்கம் - ராமாபுரம்: முகலிவாக்கத்தை பொறுத்தவரை சாந்தி நகரின் ஒரு பநகுதி, டூகார் பகதி, அய்யப்பன் கோவில், சபரி நகர், கிருஷ்ணவேணி நகர், ஏஜிஎஸ் காலனி, குமுதம் நகர், கார்த்திக் பாலாஜி நகர், லலிதாம்பாள் நகர் மற்றும் மணப்பாக்கம் மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் ‛பவர்கட்’ ஏற்பட உள்ளது. அதேபோல் ராமாபுரத்தை எடுத்து கொண்டால் தமிழ் நகர், கிரி நகர், சாந்தி நகர், ஆனந்தம் நகர் முதல் மெயின் ரோடு, குறிஞ்சி நகர், கங்கை அம்மன் கோவில் தெரு, நாயுடு தெரு, அம்பாள் நகர், பாலாம்பிகை நகர் பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.

அடையாறு: அடையாறு பகுதியில் வெங்கடேஷ்வரா நகர் 1 முதல் 5 தெருக்கள், ஜீவரத்னம் நகர் 1 மற்றும் 2வது தெருக்கள், கற்பகம் கார்டன் 1 முதல் 7 வது குறுக்கு தெரு, கற்பகம் கார்டன் முதல் மெயின் ரோடு, பெசன்ட் நகர் பீச் ஹோம் அவென்யு, தாமோதரபுரம், பென்கோ காலனி, கஸ்டம்ஸ் காலனி, பழைய சிபிடபிள்யூ குடியிருப்பு மற்றும் 4வது அவென்யு இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

மடிப்பாக்கம்: ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர் தெற்கு, குபேரன் நகர், மஹாலட்சுமி நகர், ராம் நகர் வடக்கு, ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, அண்ணா நகர், ராஜலட்சுமி நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

ஐடி காரிடார்: எம்சிஎன் நகர் மற்றும் விரிவாக்கம், பவுன்ட்ரி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கை அம்மன் கோவில் தெரு, 200 அடி ரேடியல் ரோடு, போஸ்ட் ஆபிஸ் தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து ரோடு, குளக்கரை தெரு, ஆறுமுகம் அவென்யு, குமரன் நகர், ஆனந்த் நகர், ஆர்இ நகர் பாலாஜி நகர், விநாயகா நகர், சாய் நகர், மேபில் அவென்யு, செல்வ கணபதி அவென்யு, சரவணா நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சப்ளை இருக்காது.

அதேபோல் செல்வகுமார் அவென்யு, சீவரம், தணிகாசலம் தெரு, ராமசந்திரன் தெரு, காமராஜ் தெரு, தொழிற்பேட்டை சாலை, எம்ஜி ரோடு, பாலவிநாயகர் அவென்யு, பிரகாசம் தெரு, எல்லையம்மன் சாலை, ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகர், ஓஎம்ஆர் ஒருபகுதி, திருமலை நகர், அந்நேக்ஸ், ராமப்பா நகர், சிபிஐ காலனி, ராஜீவ் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, ஐஐடி காலனி, மீனாட்சி புரம், மனோகர் நகர், விஜிபி சாந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+