7 planets: கண்களுக்கு இன்று விருந்து! ஒரே நேர்க்கோட்டில் வரும் 7 கோள்கள்! சென்னையில் காணமுடியுமா?
சென்னை: 7 கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும் வானிலை அதிசய நிகழ்வு இன்று நடைபெறும் நிலையில் அதை சென்னையில் பார்க்க முடியுமா என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
இந்த முறை விட்டுவிட்டால் அரிய நிகழ்வை காண 2040 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். இன்று உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிறைவு பெறுகிறது. இந்த நாளில்தான் 7 கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வருகிறது.

நமது சூரிய குடும்பத்தில் உள்ள புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களை இந்தியாவில் இரவு நேரத்தில் வானில் பார்க்கலாம். இது மிகவும் அரிதான நிகழ்வு ஆகும். இது போன்றதொரு நிகழ்வு கடந்த ஜனவரி மாதமே நிகழ்ந்தது.
அப்போது வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூனை பார்த்தோம். அது போல் அந்த கோள்களுடன் தற்போது பிப்ரவரி மாதம் புதன் கோளும் இணைய போகிறது.
இந்த 7 கோள்களில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 5 கோள்களை வெறுங்கண்களிலேயே காணலாம். ஆனால் யுரேனஸ், நெப்டியூனை காண பைனாகுலர், டெலஸ்கோப் தேவைப்படுகிறது. அவை மங்கலாக இருக்கும் என்பதால் தொலைநோக்கி உதவியுடன்தான் பார்க்க முடியும்.
வரும் ஆகஸ்ட் மாதம் மத்தியில் 6 கோள்களை காலை வேளையில் காணும் வாய்ப்பு கிடைக்கும் என ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள். இது போல் ஒரே நேர்க்கோட்டில் 7 கோள்கள் வரும் பிப். 28ஆம் தேதி புனித நீராடுவது என்பது மிகவும் விசேஷமானதாகும்.
இந்தியாவில் இருந்து இந்த கோள்களை பார்க்க வேண்டுமானால் சூரிய உதயத்திற்கு 45 நிமிடங்கள் கழித்து பார்க்கலாம் என்கிறார்கள். வானில் எந்த பகுதியில் அவை அணிவகுக்கின்றன என்பதை கண்டறிவது மிக முக்கியமானது. இந்த கோள்களை காண வானிலையும் சாதகமாக அமைந்தால் மட்டுமே நடக்கும். சென்னையில் ஒரே கோள்களை வெறும் கண்களால் பார்ப்பது என்பது கடினமானது என்கிறார்கள். மேலும் சென்னையில் ஒளி மாசு அதிகம் இருப்பதால் பெரும்பாலான இடங்களில் கோள்களின் அணிவகுப்பை காண்பது அரிது என்கிறார்கள். எனினும் ஒளி மாசு குறைந்த இடத்தில் பார்க்கலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications