"ஏஏ.. தள்ளு".. திணறிய விஜயகாந்த்.. ரூட்டை திமுக பக்கம் திருப்பி.. லட்டு நியூஸ் சொல்ல போகுதா தேமுதிக
தேமுதிகவுக்கு அடுத்த தலைவர் நியமனம் செய்யப்படுவதற்கான பேச்சு நடந்து வருகிறதாம்
சென்னை: விஜயகாந்த் ஆபீசில் இருந்து ஒரு நல்ல செய்தி, கூடிய சீக்கிரம் வர போகிறதாம்.. அது என்னவென்ற ஆர்வம் தேமுதிக தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பேயே தேமுதிகவுக்கு புதிய தலைவர் என்ற பேச்சு எழுந்தது.. அதாவது இளைஞரணிக்கு விஜய பிரபாகரனை செயலாளராக நியமித்து தமிழகம் முழுவதும் அவரை ஒரு ரவுண்டு அடிக்க வைக்க திட்டமிட்டார் பிரேமலதா.
மேலும், பொதுக்குழு மூலம் பிரேமலதா விஜயகாந்துக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டால், அவர் தற்போது வகித்து வரும் பொருளாளர் பதவி எல்.கே.சுதீஷ் வசம் கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

கண்ணீர்
இதற்கு பிறகு, இந்த பிரமோஷன்கள் குறித்த பேச்சுக்கள் எதுவும் வரவில்லை.. திடீரென சுதந்திர தினத்தன்று, விஜயகாந்த் கொடியேற்ற அழைத்து வரப்பட்டார்.. உடல்நலம் சரியில்லாதவரை இப்படியெல்லாம் வெளியே அழைத்து வர வேண்டுமா? அவரால் நேராக உட்கார கூட முடியவில்லை. கூலிங்கிளாஸ்கூட எடுத்து போட்டுக் கொள்ள முடியவில்லை.. ப்ளீஸ் , அவரை விட்டுடுங்க.. எங்களால் அவரை இப்படி பார்க்க முடியவில்லை என்று கண்ணீர் வடித்தனர் தொண்டர்கள். இது தொடர்பான வீடியோவும் வெளியானது.

கூலிங் கிளாஸ்
இதற்கு பிறகு, அவரது பிறந்த நாள் அன்று கட்சி ஆபீசுக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டார் விஜயகாந்த்.. பார்ப்பதற்கு தெளிவாக இருந்தார். அனைவருக்கும் வணக்கம் சொன்னார்.. கூலிங்கிளாஸை கழட்டி அவரே திரும்பவும் போட்டுக் கொண்டார்.. தொண்டர்களை மறைத்து கொண்டு, அவரை சூழ்ந்து நிர்வாகிகள் நிற்கவும், ஒருநிமிடம் திணறிவிட்டார் விஜயகாந்த்.. "ஏஏ.. தள்ளு" என்று அவர்களை கைகளால் விலக்கி தள்ளினார். இதையெல்லாம் பார்த்து கைகளை தட்டி தொண்டர்கள் பூரித்தே போனார்கள்.. இந்த பிறந்தநாள் நிகழ்வு ஓரளவு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அனைவருக்கும் தந்திருந்தது. இந்நிலையில், இப்போது, மீண்டும் தலைவர் பதவிக்கான சலசலப்புகள் தேமுதிகவுக்குள் துவங்கி உள்ளது.

விஜயகாந்த் ஹெல்த்
விரைவில் எம்பி தேர்தல் உள்ள நிலையில், தமிழக கட்சிகள் அதற்கு தயாராகி வரும் நிலையில் தேமுதிகவும் ரெடியாகி வருகிறது.. விஜயபிரபாகரன் ஏற்கனவே, தமிழக மக்களிடம் சுற்றுப்பயணம் கிளம்பி விட்டார்.. ஒருபக்கம் தேமுதிக நிர்வாகிகள் இல்ல விழாக்கள், மறுபக்கம் தொண்டர்கள் சந்திப்பு என ரவுண்டு கட்டி பறந்து வருகிறார்.. இந்நிலையில், கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்ற விவகாரம் எழுந்துள்ளது.. இதுகுறித்து 2 விதமான கருத்துக்களும் உலா வருகின்றன.

விஜயகாந்த்
அதன்படி, நிறுவன தலைவராக விஜயகாந்த் இருக்கும் நிலையில், கட்சி தலைவராக பிரேமலதா பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. ஆனால், இதற்கு பதிலாக, வேறு ஒரு ஐடியாவை நிர்வாகிகள் தந்து வருகிறார்களாம்.. கட்சி தலைவராக விஜயகாந்த் இருக்கட்டும்.. பிரேமலதா செயல்தலைவராக செயல்படட்டும் என்று சொல்கிறார்களாம்.. இப்படி இருவித கருத்துக்களில் எந்த ஒரு இறுதி முடிவும் இதுவரை எட்டப்படவில்லையாம்.. ஒருவேளை கட்சி தலைவர் விஜயகாந்த் என்றால், செயல்தலைவர் பதவி புதிதாக உருவாக்கப்படும் என தெரிகிறது...

விஜயபிரபாகரன்
அதாவது திமுக பாணியிலேயே இந்த செயல் தலைவர் பதவி உருவாகும் என்கிறார்கள்.. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, அவரால் கட்சி பணிகளை கவனிக்க முடியவில்லை.. அப்போது, ஸ்டாலின்தான், செயல் தலைவர் பதவியை ஏற்றிருந்தார்.. கட்சியில் எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளும் ஸ்டாலின் ஒப்புதல் பேரில்தான் நடந்தது.. அதுபோலவே, திமுகவுக்கு அடுத்தபடியாக தேமுதிக இப்படி ஒரு போஸ்டிங்கை உருவாக்கலாம் என்று தெரிகிறது. இதில் எந்த பதவியை பிரேமலதா ஏற்றாலும், விஜய பிரபாகரனுக்கும் ஏதேனும் முக்கிய பதவிகள் கொடுக்கப்படலாம் என தெரிகிறது.

அன்புமணி
திமுகவுக்கு நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று அதிமுக சட்டசபையில் வீற்றிருக்கிறது.. இல்லை, இல்லை, நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்று பாஜக குறுக்கே வந்தது.. இல்லை, இல்லை, நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று பாமக அன்புமணி கூறியிருந்தார்.. இவர்கள் எல்லாரையும் புறந்தள்ளிவிட்டு, "திமுகவுக்கு எதிர்க்கட்சி நிஜமாகவே தேமுதிகதான்" என்று பிரேமலதா சொல்லியிருந்தார்.. இதைக்கேட்டுவிட்டு, அதிமுக, பாஜக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் விக்கித்து போயின.

லைன்ல நில்லுங்க அக்கா
அதுமட்டுமல்ல, பிரேமலதாவின் இந்த பேட்டியை பார்த்துவிட்டு நெட்டிசன்களே பதிலடி தர ஆரம்பித்துவிட்டனர்.. "எல்லாரும் எதிர்க்கட்சிதான் என்றால் எங்களுக்கு யார்தான் உண்மையான எதிர்க்கட்சி? அக்கா, லைன்ல வந்து நில்லுங்க.. சரி, சரி, சண்டை போடாம யார் எதிர்க்கட்சின்னு முடிவு பண்ணுங்க" என்று கலாய்த்து தள்ளினர்.. தற்போது கட்சிக்கு புது தலைமை வர உள்ள நிலையில், புது ரத்தம் பீறிட்டு கட்சி செயல்படுமா? அதலபாதாளத்தில் தொங்கி கிடக்கும் கட்சியை, செங்குத்தாக தூக்கி நிறுத்த ஏதாவது முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா? மக்கள் நலனுக்காக போராட்டங்கள் ஏதாவது முன்னெடுக்க போகிறார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்..!

ட்ரீட்மென்ட்
இதனிடையே, விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா சொல்லும்போது, "அவரது உடல்நிலையை பார்த்து தொண்டர்கள் அழுவதாக சொல்கிறார்கள்.. உண்மைதான்.. எல்லாருக்குமே அந்த கவலை இருக்கு.. அவரை மாதிரி ஒரு ஆக்டிவ் நபர் யாரும் இல்லை.. அவரது இடத்தை நிரப்ப இன்னும் யாரும் இல்லை.. ஆனால் வெளியே வரவேண்டும், தொண்டர்களை சந்திக்க வேண்டும் என்று அவர்தான் விரும்பினார்.. அதனால்தான் அழைத்து வந்தோம்.. கேப்டன் நடப்பதிலும், பேசுவதிலும் குறைபாடு இருக்கிறது.. அது இல்லை என்று மறுக்க முடியாது.. 70 வயது ஆகிவிட்டது.. எல்லா வகையான சிகிச்சையும் தரப்பட்டுள்ளது.. இப்போதும் சிகிச்சை நடக்கிறது.. இப்போது அவர் நல்லாவே இருக்கார்" என்று கூறியுள்ளார்.. பிரேமலதாவின் இந்த பேட்டி தொண்டர்களிடம் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications