வயசு 72.. ஆபாச படம் பார்த்து சிக்கிய மோகன்.. இளம் பெண்ணிடம் காட்டி விஷமம்.. கைது செய்த போலீஸ்
சிறார் ஆபாச படம் பார்த்த 72 வயது முதியவர் அதிரடி கைது செய்யப்பட்டார்
சென்னை: 72 வயசு மோகன் தாத்தா எசகுபிசகாக சிக்கி கொண்டுள்ளார்.. ஆபாச படம் பார்த்துள்ளார்.. அதுவும் குழந்தைகள் ஆபாச படத்தினை டவுன்லோடு செய்து பார்த்துள்ளார்.. இந்த விஷயத்தை உறுதிபடுத்தியதுமே மோகனை அதிரடியாக கைது செய்துள்ளது சென்னை போலீஸ்!
''குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். ஆபாச படம், வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப்களில் வைத்திருப்பதும், அது சம்பந்தப்பட்ட லிங்க்குகளை பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம். இப்படி செய்பவர்களுக்கு 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்" என்று காவல்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இவ்வளவு கடுமையாக எச்சரித்தும்கூட, திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் சில தினங்களுக்கு முன்பு சிக்கினார். ஏசி மெக்கானிக்கான இவர், எப்ப பார்த்தாலும் குழந்தைகள் ஆபாச வீடியோவை டவுன்லோடு செய்வது, அதையே வெறித்தனமாக பார்த்து கொண்டிருப்பது, நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் ஷேர் செய்வது என்றே பல வருடமாக பொழுதை கழித்திருக்கிறார்.. இவரது ஐடி-யை வைத்து போலீசார் கைது செய்திருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் அன்றே ஏற்படுத்தியது.

டவுன்லோடு
இந்நிலையில், திரும்பவும் ஒருவர் சிக்கி உள்ளார்.. அதிலும் 72 வயசு தாத்தா இந்த காரியத்தை செய்துள்ளார்.. இவர் பெயர் மோகன்.. சென்னை சூளைமேட்டில் வசித்து வருகிறார்.. இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார்.. குழந்தைகள் ஆபாச வீடியோவை மோகன் டவுன்லோடு செய்து இந்த ஆபாச வீடியோ பார்த்து வந்திருக்கிறார்.

ஆபாச வீடியோ
இத்துடன் மோகன் நிற்கவில்லை.. இவர் வீட்டுக்கு வந்த வந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு ஐ-பேடில் குழந்தை ஆபாச வீடியோக்களை காட்டி உள்ளார்.. அந்த வீடியோக்களை பார்க்குமாறும் கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் எரிச்சலும் ஆத்திரமும் அடைந்த அந்த மாணவி, போலீசில் புகார் தரவும்தான் மோகன் கைதாகி உள்ளார். கைது செய்யப்பட்ட மோகன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிர்ச்சி
ஏற்கனவே கடுமையாக போலீஸ் எச்சரித்தும் குழந்தைகள் ஆபாச வீடியோவை டவுன்லோடு செய்த இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைவதா அல்லது 72 வயது தாத்தாவின் காரியத்தை நினைத்து அதிர்ச்சி அடைவதா தெரியவில்லை. ஆனால், நம் போலீசார் எந்நேரமும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடனேயே இருந்து வருகிறார்கள் என்பது மட்டும் தெளிவாகி கொண்டே வருகிறது.

சோதனை
இந்நிலையில் சென்னையில் சிறார் ஆபாச படம் தொடர்பாக 30 பேரின் ஐபி முகவரிகளை கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டனர். அப்போது சிறார் ஆபாச படங்கள் குறித்த எச்சரிக்கையும் மிக கடுமையாகவே விடுத்தனர். இதைதவிர, இன்டர்நெட் மையங்களிலும் போலீசார், சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் குழந்தைகள் ஆபாச வீடியோ பார்ப்பவர்கள் மேலும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications