Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"செண்ட்டிமென்ட்".. சீமானை பாத்தீங்களா.. "முஹம்மது" மடியில் பிரபாகரன்.. திருச்செந்தூரின் கடலோரத்தில்!

சீமான் தன்னுடைய மகனுக்கு திருச்செந்தூரில் மொட்டை போட்டு பூஜை செய்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னொரு அதிரடியை செய்து, மொத்த தமிழகத்தின் அரசியல் கட்சியையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்..!

நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்ததில் இருந்தே திராவிட சித்தாந்தங்களை எதிர்த்தும், அரசியல் செய்தும் வருபவர் சீமான்.. ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை தனித்தே களமிறங்கி வருகிறார்.

தேர்தலில் ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை என்றாலும், அதைப்பற்றி இவர் கொஞ்சம்கூட கவலைப்படுவதேயில்லை..

 B = TEAM

B = TEAM

அதேசமயம், கமல், உட்பட எத்தனையோ பேர், சீமானுடன் கூட்டணி சேர முயன்றபோதும், தன் கட்சிக்கான தனித்துவத்தை தொடர்ந்து கடைப்பிடித்தும் வருகிறார். யாருக்காகவும் தன்னை சமரசப்படுத்தி கொள்வதும் இல்லை. சீமானை பொறுத்தவரை பாஜகவின் பி டீம் என்று பரவலாக விமர்சிக்கப்படுபவர்... ஆனால், பாஜகவைதான் அதிகம் தன் மேடைகளில் விமர்சிப்பார் என்பது வேறு விஷயம்.. பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே, அவர்களும் சென்ட்டிமென்ட்களுக்கு ஆளாகிவிடுவதை தவிர்க்க முடியாது..

 சென்ட்டிமென்ட்

சென்ட்டிமென்ட்

ஆனால், சீமான் போன்ற ஒரு சிலர், இந்த சென்ட்டிமென்ட்டில் இருந்து விலக்கு என்றே சொல்லலாம்.. இதற்கு நிறைய உதாரணங்கள் இருந்தாலும், சமீபத்தில் நடந்த நிகழ்வையே இங்கு சொல்லலாம்.. சில தினங்களுக்கு முன்பு சீமான் ஒரு கார் வாங்கியிருந்தார். 8 வருடம் கழித்து, அந்தஃபார்ச்சூனர் காரை வாங்கினார்..வழக்கமாக அரசியல்வாதிகள் கார் வாங்கினால் ராசியான கலர் அல்லது நம்பர் பார்த்து பார்த்து வாங்குவார்கள்.. அந்த வகையில், 7-ம் நம்பர் ராசியாக சொல்லப்படும்... ஆனால், சீமானின் கார் நம்பர் 8 என்று வருகிறது..

8 + 8 + 8

8 + 8 + 8

இந்த கார் என்றில்லை.. இதற்கு முன்பு பயன்படுத்திய கார் நம்பரும் 8-ல் தான் வரும்.. அதே போல பிரச்சாரத்திற்கு ஒரு வேனை பயன்படுத்துவார்.. அந்த வேன் நம்பரும் 8 தான். பலருக்கு ராசியில்லாத நம்பராக சொல்லப்படும் இந்த 8-ம் நம்பர் காரை, சீமான் விரும்பி கேட்டு வாங்கினார்.. அதுமட்டுமல்ல, வண்டி பிளேட்டிலும், ஆங்கில எழுத்துக்களுக்கு பதிலாக தமிழில் எழுதியிருப்பார்.. தான் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலுமே "தமிழ்நாடு" என்று முழுமையாக குறிப்பிட்டிருப்பது, சீமானின் தனி ஸ்டைல்.

 திருச்செந்தூர்

திருச்செந்தூர்

இந்த காரில்தான், ஸ்டிரைட்டாக, திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலில் வந்து இறங்கினார்.. பூஜையும் செய்தார்.. விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரன், இந்த திருப்போரூர் கந்தசாமி கோவிலில்தான் கல்யாணம் செய்து கொண்டார்.. அதனாலேயே இந்த கோவிலுக்கு அடிக்கடி சீமான் வருவாராம்.. தன்னுடைய மகனுக்குமாவீரன் பிரபாகரன் என்றே பெயர்சூட்டி உள்ளார்.. அன்று திருப்போரூரில் அசத்தியதுபோலவே, இப்போது இன்னொரு சென்ட்டிமென்ட்டையும் திருச்செந்தூரில் தகர்த்துள்ளார் சீமான்.

சென்ட்டிமென்ட்

சென்ட்டிமென்ட்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி மூலவர், சண்முகர், பரிவார தெய்வங்களை குடும்பத்தோடு தரிசனம் செய்துள்ளார்.. அப்போது, தன்னுடைய மகன் மாவீரன் பிரபாகரனுக்கு பக்தர்களோடு பக்தராய் அமர்ந்து முடி காணிக்கை செலுத்தினார்... அதுமட்டுமல்ல, நாம் தமிழர் கட்சியின் சென்னை மாவட்ட செயலாளரான முகமது பாசில் என்பவர் மடியில் உட்கார வைத்து, பிரபாகரனுக்கு மொட்டை அடித்தார்.. இதற்கு பிறகு, துலாபாரம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றியதுடன், மகனை அழைத்து சென்று திருச்செந்தூர் கடலில் புனித நீராடி விட்டு உறவினர்கள், நண்பர்களுடன் சீமான் சாமி தரிசனம் செய்தார்.

 முஹம்மது பாசில்

முஹம்மது பாசில்

யார் இந்த முகமது பாசில்? என்ற கேள்வி அனைத்து கட்சியின் புருவங்களையும் உயர்த்தி வருகிறது.. பொதுவாக, உறவினர்கள், அதிலும் தாய்மாமன்கள் மடியில் உட்கார வைத்துதான், காது குத்துவது அல்லது மொட்டை அடிப்பது தமிழர்களின் வழக்கம்.. ஆனால், சீமான், முகமது பாசிலின் மடியில் குழந்தையை உட்காரவைத்து சிறப்பு செய்தது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.. சென்ட்டிமென்ட்களுடன் மட்டுமல்ல, சென்ட்மென்ட்களை தகர்த்தும்கூட அரசியல் செய்யலாம் என்பதைதான் சீமான் நிரூபித்து வருகிறார், அன்று திருப்போரிலும், இன்று திருச்செந்தூரிலும்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+