மக்கள் நீதி மய்யம் பொருளாளர் வீட்டில்.. கணக்கில் வராத ரூ.8 கோடி பணம்.. வருமான வரி சோதனையில் பகீர்
சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி பொருளாளர் சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் , நடத்த வருமான வரி சோதனையில் 8 கோடி ருபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

திருப்பூர் மற்றும் தாராபுரத்தில் 5 இடங்களில் நேற்று மாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தாராபுரம் மதிமுக மாவட்ட துணைச் செயலாளரும் தொழிலதிபருமான கவின் நாகராஜ் மற்றும் திமுக நகர செயலாளர் கே.எஸ். தனசேகர் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி
புதன்கிழமை மாலை துவங்கிய சோதனை நள்ளிரவு முடிவடைந்தது. அதே போல் , திருப்பூரில் அனிதா ஹெல்த்கேர் மற்றும் அனிதா டெஸ்காட் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் லட்சுமி நகர் பிரிட்ஜ்வே காலனி பகுதியில் அனிதா டெக்ஸ்காட் என்ற பின்னலாடை நிறுவனம் நடத்தி வருபவர் சந்திரசேகர். ம.நீ.ம பொருளாளராகவும் இருக்கிறார். இவர் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பை மற்றும் கொரோனா கவச ஆடைகள், முக கவசங்களை உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கி வருகிறார்.

கணக்கில் வராத ரூ.8 கோடி
இவரது நிறுவனத்திற்கும் இன்று நான்கு வாகனங்களில் வந்த வருமான வரி துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில்
திருப்பூர் மற்றும் தாராபுரம் பகுதியில் நடக்கும் சோதனையில் 8 கோடி ருபாய் அளவிற்கு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்படிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் , சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.

திமுக நிர்வாகி
திமுக நகர செயலாளர் தனசேகர் வீட்டின் முன்பு திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு இருந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றதும் நகர செயலாளர் தனசேகரை இருசக்கர வாகனம் மூலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக தேர்தல் பணிமனை அலுவலகத்திற்கு தொண்டர்கள் அழைத்துச் சென்றனர்.

பணம் கைப்பற்றப்படவில்லை
தேர்தல் நேரம் என்பதால் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தலை முடித்துவிட்டு கோவை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் வருவதாக தெரிவித்தேன் என்று தொண்டர்களிடம் கூறினார். இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் தேர்தல் பணிமனையில் இருந்து கலைந்து சென்றனர். திமுக, மதிமுக பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்ட சம்பவம் தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் அதன் தலைவர் முருகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications