8 மாவட்டங்களில் இன்று அதீத மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?
Recommended Video
சென்னை: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுபோல் புதுவையிலும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கிழக்கு திசை காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் புதுவையிலும் ஒரு சில மாவட்டங்களில் இன்று அதீத மழைக்கு வாய்ப்புள்ளது.

கனமழை
சென்னையை பொருத்தவரை மிதமான மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அது போல் நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும்.

மழை பெய்யும்
மேலும் நாளை முதல் படிப்படியாக மழை பெய்யும் என ஏற்கெனவே இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன. அவை மேலும் வலுவடையும்.

எச்சரிக்கை
லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சூறாவளி காற்று வீசும். எனவே மீனவர்கள் அப்பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்
இன்று சில பகுதிகளில் இந்திய வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழையானது 8 செ.மீ.ருக்கு மேல் பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நேற்றைய தினம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் கனமழை கொட்டி தீர்த்தது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications