ஒரே நாளில் 8 கொலைகள்.. ரத்தக் களறியான தமிழ்நாடு.. எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று (செப்டம்பர் 29) ஒரே நாளில் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் மட்டும் இந்த ஆண்டு இதுவரை 141 பேர் கொல்லப்பட்டுள்ளதால், தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போய் இருப்பதாக கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் கொலைகள் நடக்காத நாள் இல்லை என்ற அளவுக்குத் தினமும் கொலைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், குற்றங்களைத் தடுக்க வேண்டிய முதலமைச்சர் விஜய் வாய்மூடி மௌனமாக இருக்கிறார் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

tvk law and order crime

ஒரே நாளில் 8 கொலைச் சம்பவங்கள்

1. திருநெல்வேலியில் கோயில் நிலப் பிரச்சினை காரணமாக, பெட்ரோல் பங்க் உரிமையாளரும் அவரது சகோதரரும் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி பட்டப்பகலில் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2. சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. தாயின் கண் முன்னே அஜித் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

3. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இகிடையே ஏற்பட்ட மோதலை விலக்க முயன்ற தலைமை பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்தார்.

4. மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் பகுதியில் அரசு பஸ் கண்டக்டர் தமிழ்ச்செல்வன் வேலை முடித்துவிட்டு இரவில் தனது டூவீலரில் வீடு திரும்பியபோது, மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

5. கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே வசித்து வரும் தங்கலீலா என்பவரின் மகன் சிபி குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்துள்ளார். சம்பவத்தன்று குடிக்க பணம் கேட்டு தாயிடம் கேட்டுள்ளார். தங்கலீலா பணம் தர மறுத்ததால் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. ஆத்திரத்தில் சிபி தாயை கட்டிலில் தள்ளி கழுத்தை நெரித்து, பிறகு தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துள்ளார்.

6. தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்தோஷ்குமார் (27). சந்தோஷ்குமாருக்கும், சுகீர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மதுபான பாரில் சுகீர், கண்ணன், மற்றொரு கண்ணன் ஆகிய 3 பேரும் மது அருந்தினர். அப்போது அங்கு வந்த சந்தோஷ்குமாரை கண்ணன் அவதூறாக பேசியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர், சந்தோஷ்குமார் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் பைக்கில் வந்த சுகீர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து அவரை வழிமறித்து பீர் பாட்டில்களால் சந்தோஷ்குமாரை மாறி மாறி குத்திக் கொன்றனர்.

7. சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் மது அருந்துவதற்கு பணம் கேட்டு தராததால் தனது பாட்டியையே பேரன் படுகொலை செய்துள்ளான்.

8. திருவண்ணாமலை அருகே தண்டராம்பட்டு பகுதியில் ஆடு திருட முயன்றதாக கூறி கபடிவீரர் சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்டார்.

இப்படியாக, நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்தேறி இருக்கின்றன. தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்த அச்சங்களை எழுப்பி உள்ளது. தமிழகத்தில் காவல்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தி, மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+