85% வாக்குப்பதிவு ’பூம்’ எல்லாம்.. 2006ஐ விட கம்மி தான்! 50 ஆண்டுகால தேர்தல் வரலாறு சொல்லும் கணக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதுவரை நடந்த வாக்குப்பதிவு சதவீதத்தில் இது உயர்வு என்றாலும் முந்தைய தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாக தோன்றலாம்.. ஆனால் தொடர்ந்து உயர்வு வாரியாக பார்க்கும்போது 2001 - 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவும்போது உயர்ந்ததை விட கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் சிறிதளவு தான் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையை முழுமையாக படித்தால் அது எப்படி என்பது தெரியும். 2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 423 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்கள் வாக்களிக்க தமிழக முழுவதும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தனர்.

Tamil Nadu Assembly Election 2026 TN Polls election commission

தமிழகத்தில் உள்ள மொத்தம் வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியை 73 லட்சத்து 43291 இன்றை பிரிந்த நிலையில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரம் பேரும், பெண் வாக்காளர்கள் இரண்டு கோடியே 93 லட்சத்து 4,000 பேர் என இருந்தனர். 7728 மூன்றாம் பாலினத்தவர் வாக்களித்திருந்தனர்.

தமிழக சட்டசபை தேர்தல்

அந்த வகையில் பார்க்கும்போது 2026 தமிழக சட்டசபை தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவு என சொல்லப்பட்டாலும், சராசரி ரீதியாக பார்க்கும்போது முந்தைய தேர்தல் வாக்குப்பதிவை விட இந்த தேர்தல் வாக்குப்பதிவு 11.06 சதவீதம் தான் உயர்ந்திருக்கிறது. ஆனால் 2001 - 2006 சட்டமன்றத் தேர்தல்களில் இந்த வாக்குப்பதிவு சதவீதம் சற்று அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2001 சட்டமன்றத் தேர்தலை விட 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 11.49 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருந்தது.

Tamil Nadu Assembly Election 2026 TN Polls election commission

வாக்கு சதவீதம்

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 1967இல் இரண்டு கோடியே 7 லட்சத்து 99 ஆயிரத்து 362 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், ஒரு கோடியே 59 லட்சத்து 2796 பேர் வாக்களித்து இருந்தார்கள். அப்போது வாக்கு சதவீதம் 76.57 ஆக இருந்தது. 1971இல் கடந்த தேர்தலை விட 4.47 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகி இருந்தது. 1977இல் கூடுதலாக 22% வாக்காளர்கள் அதாவது இரண்டு கோடியே 81 லட்சத்து 61,418 பேர் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில் ஒருவருடைய 73 லட்சத்து 42 ஆயிரத்து 799 பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். இது 10.52 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

1996 சட்டமன்றத் தேர்தல்

தொடர்ந்து 1980, 84, 89, 91, 96 தேர்தல் வரை வாக்கு சதவீதம் முந்தைய தேர்தல்களை விட ஏற்ற இறக்கமாக இருந்தது. குறிப்பாக சொல்ல போனால் 1996 சட்டமன்றத் தேர்தலில் 4 கோடியே 24,78,965 பேர் வாக்களிக்க தகுதி பெற்றனர். அந்த தேர்தலில் 2 கோடியே 84,39,249 பேர் வாக்களித்தனர். 1991 சட்டமன்றத் தேர்தலை விட கூடுதலாக மூன்று சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.அடுத்ததாக 2001 சட்டமன்றத் தேர்தலில் 4 கோடியே 74,79,000 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் இரண்டு கோடியே 80 லட்சத்து 48,77 பேர் வாக்களித்தனர். வாக்கு சதவீதம் 59.07 ஆக இருந்தது.

2026 இல் 11.06%

இது கடந்த தேர்தலை விட 7.88% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 2006 சட்டமன்றத் தேர்தலில் 4 கோடியே 66 லட்சத்து 3,352 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 3 கோடியே 28 லட்சத்து 85 ஆயிரத்து 649 பேர் வாக்களித்திருந்தனர். வாக்கு சதவீதம் அப்போதைக்கு 11.49 ஆக இருந்தது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஐந்து கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்கு அளிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 4 கோடியே 85 லட்சம் பேர் வாக்களித்து இருந்தனர். இது ஒட்டுமொத்த சதவீதத்தில் 85 ஆக இருந்தாலும் கடந்த தேர்தலை விட அதாவது 2026-ல் 11.49 விட 2026 இல் 11.06% ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+