186% சர்ரென உயரும் சம்பளம்.. 8வது ஊதியக்குழு தரப்போகும் பெரிய சர்ப்ரைஸ்.. மோடி மாஸ்டர் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக்குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. 6வது ஊதியக் குழுவில் 7,000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டது. 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்களுக்கு தற்போது குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 18,000 ரூபாய் கிடைக்கிறது.

8வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச சம்பளம்: இப்படிப்பட்ட நிலையில்தான் 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது.

narendra modi dearness allowance

7வது ஊதியக் குழுவின் கீழ் 2.57 ஃபிட்மென்ட் காரணி உள்ளது. இது 8வது ஊதியக்குழுவில் குறைந்தது 2.86 பிட்மென்ட் காரணியாக உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

2.86 என்ற ஃபிட்மென்ட் காரணிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் அதிகரித்து ரூ. 51,480 ஆக இருக்கும், இது தற்போதைய ரூ.18,000 உடன் ஒப்பிடும் போது 186 சதவீதம் உயர்வு ஆகும்,

8வது ஊதியக்குழு: 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது மத்திய ஊதியக் குழுவை உருவாக்குவதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் தொடர்பான பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும்.

7வது ஊதியக் குழு அமலுக்கு வந்ததில் இருந்து 10 ஆண்டுகள் இடைவெளியுடன், அடுத்த ஊதியக் குழுவை 2025 அமல்படுத்த வேண்டும். பொதுவாக இரண்டு வெவ்வேறு ஊதியக் கமிஷன்களை அமல்படுத்துவதற்கு இடையே 10 ஆண்டுகள் இடைவெளியை மத்திய அரசு பின்பற்றுகிறது.

ஆனால், அடுத்த ஊதியக் குழு அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை வாய் திறக்காமல் இருந்தது. லோக்சபா தேர்தல் முடிந்து, மோடி 3.0 தலைமையில், 8வது சம்பள கமிஷன் அமைப்பது குறித்த சலசலப்பு தற்போது வலுத்து வருகிறது. இது போக இன்னொரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.

தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.

அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+